Home இந்தியா சோனியா முன்னிலையில் காங்கிரசில் சேர்ந்தார் நடிகை விஜயசாந்தி!

சோனியா முன்னிலையில் காங்கிரசில் சேர்ந்தார் நடிகை விஜயசாந்தி!

609
0
SHARE
Ad

28-congress-president-sonia-gandhi-with-ms-vijaya-shanthi-mp-after-she-joined-the-congress-party-600டெல்லி, பிப் 28 – தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சியில் இருந்து விலகி சோனியா முன்னிலையில் நடிகை விஜயசாந்தி காங்கிரஸில் சேர்ந்துள்ளார். ஆந்திர மாநிலத்தில் சந்திரசேகரராவின் தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சி எம்.பி.யாக இருந்து வந்தார் நடிகை விஜயசாந்தி.

நாடாளுமன்றத்தில் தெலுங்கானா மசோதா நிறைவேற்றிய நிலையில் காங்கிரஸுடன் தனது கட்சியை சந்திரசேகரராவ் இணைத்துவிடுவார் என எதிர்பார்க்கப்பட்டது. இதுதொடர்பாக இரு தரப்பிலும் பேச்சுவார்த்தை நடந்தது. ஆனால் தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி காங்கிரஸுடன் இணைவதாக எந்த வாக்குறுதியும் வழங்கப்படவில்லை என கூறி வருகிறது.

இதனால் காங்கிரஸுடன் தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி இணையுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்நிலையில் தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி எம்.பி. நடிகை விஜயசாந்தி நேற்று டெல்லியில் சோனியாவை சந்தித்து காங்கிரஸில் சேர்ந்தார்.

#TamilSchoolmychoice

இதை ஆந்திர மாநில காங்கிரஸ் பொறுப்பாளரும், அகில இந்திய காங்கிரஸ் பொதுச்செயலாளருமான திக் விஜய் சிங், சோனியா காந்தியின் வீட்டுக்கு வெளியே செய்தியாளர்களிடம் தெரிவித்தார். காங்கிரஸில் விஜயசாந்தி சேர்ந்துள்ளதால் தெலுங்கானா ராஷ்டிரிய சமிதிக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.