Home இந்தியா பிரச்சனை லாலுவிடம் உள்ளது-பீகார் முதல்வர் நிதிஷ்குமார்!

பிரச்சனை லாலுவிடம் உள்ளது-பீகார் முதல்வர் நிதிஷ்குமார்!

553
0
SHARE
Ad

16-nitish-kumar-12-600டெல்லி, பிப் 28 – ஒரு கட்சியில் இருந்து, மற்றொரு கட்சிக்கு தாவுவது அரசியலில் சாதாரணமானதே. பிரச்னை லாலுவிடம் இருப்பதால் தான், அவர் கட்சி, எம்.எல்.ஏ.க்களில் பலர், எங்களின் ஐக்கிய ஜனதா தளம் கட்சிக்கு வருகின்றனர். இன்னும் பலர் வர உள்ளனர்.

வருபவர்களைத் தடுக்க முயற்சிகளை மேற்கொள்ள வேண்டுமே தவிர, எங்களை குறை கூறக் கூடாது என ஐக்கிய ஜனதா தளம் கட்சி தலைவரும்,  பீகார் முதல்வருமான  நிதிஷ்குமார் கூறினார். மேலும், குஜராத் கலவரத்தைத் தடுக்க, மோடி தவறிவிட்டார் என, தவறாக பிரசாரம் செய்யப்படுகிறது.

குஜராத்தில், 2002 கலவரத்தின் போது  அதில் ஈடுபட்டவர்கள் மீது  காவலர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில், நூற்றுக்கணக்கானோர் இறந்தனர். ஆனால், 1984-ல் டில்லியில், ஆயிரக்கணக்கான சீக்கியர்கள் கொல்லப்பட்ட போது, டில்லி காவலர்கள் ஒரு துப்பாக்கிச் சூடு நடத்தியது உண்டா என ராஜ்யசபா எதிர்க்கட்சித் தலைவர் அருண் ஜெட்லி கேள்வி எழுப்பினார்.

#TamilSchoolmychoice

நாட்டின் கல்வி முறை, ஏழை, பணக்காரர்களுக்கு பாரபட்சமின்றி இருக்க வேண்டும். மகாபாரதத்தில், துரோணாச்சாரியாரிடம், மன்னன், அர்ஜுனனும், ஏழை, ஏகலைவனும் கல்வி கற்றது போல், நம் நாட்டின் கல்வி முறையும் அமைய வேண்டும். ஆனால், இங்கே, இரு கல்வி முறைகள் உள்ளன. பணக்காரர்களுக்கு உயரிய, தனியார் கல்வி முறையும், ஏழைகளுக்கு அரசின் பொது கல்வி முறையும் உள்ளது. இந்நிலை மாற வேண்டும் என காங்கிரஸ் நாடாளுமன்ற சபாநாயகர் மீரா குமார் கூறினார்.