Home இந்தியா நாடாளுமன்ற தேர்தல் தமிழகத்தில் திமுக, அதிமுக இடையே தான் போட்டி – திருமாவளவன்!

நாடாளுமன்ற தேர்தல் தமிழகத்தில் திமுக, அதிமுக இடையே தான் போட்டி – திருமாவளவன்!

686
0
SHARE
Ad

7-26-2011-45-thirumavalavan-hails-lankan-taசிதம்பரம், பிப் 28 – விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் எம்பி நேற்று சிதம்பரம் வந்தார். அங்கு நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி திமுக கூட்டணியில் தொடர்கிறது. இந்த அணி சார்பில் சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதியில் நான் போட்டியிடுகிறேன்.

கடந்த 5 ஆண்டுகளில் நாடாளுமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.19 கோடி நிதி சிதம்பரம் தொகுதியின் அடிப்படை வளர்ச்சிக்காக செலவு செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக 40 சதவீதம் கிராமங்களுக்கு பகிர்ந்து அளிக்கப்பட்டுள்ளது.

சிதம்பரம், அரியலூர் பகுதியில் மத்திய அரசின் கேந்திரிய வித்யாலயா பள்ளி, அரியலூர் பகுதியில் பருத்தி கொள்முதல் நிலையம், சிதம்பரம் பகுதியில் உணவு பொருட்கள் பதப்படுத்தும் தொழிற்சாலை ஆகியவற்றை கொண்டு வருவதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளேன்.

#TamilSchoolmychoice

சிதம்பரம் தொகுதியில் திருமாவளவன் வெற்றி பெற்றால் வன்முறை காடாகிவிடும் என சிலர் கூறுகின்றனர். ஆனால் கடந்த 5 ஆண்டுகளாக சிதம்பரம் தொகுதி அமைதி பூங்காவாக இருந்து வருகிறது. சாதி, மதவெறி சக்திகளை மக்கள் புறக்கணிக்க வேண்டும்.

வன்முறையை தூண்டுவதாக எங்கள் மீது பழி போடுகிறார்கள். டாக்டர் ராமதாசின் பேச்சு என்னுடைய உயிருக்கு பாதுகாப்பற்ற சூழ்நிலையை ஏற்படுத்தி வருகிறது. தமிழகத்தில் திமுக, அதிமுக அணிகளுக்கு இடையேதான் போட்டியுள்ளது. 3வது அணி எப்போதும் வலுவாக அமைந்ததில்லை. இத்தேர்தலில் திமுக கூட்டணி மகத்தான வெற்றி பெறும் என தொல்.திருமாவளவன் கூறினார்.