Home உலகம் ”பூமிக்கு வெளியே புதிய உலகங்கள்”-நாசாவின் அதிசய கண்டுபிடிப்பு!

”பூமிக்கு வெளியே புதிய உலகங்கள்”-நாசாவின் அதிசய கண்டுபிடிப்பு!

545
0
SHARE
Ad

27-alien-planets-600-jpgவாஷிங்டன், பிப் 28 – நாசா சமீபத்தில் கனிம வளம் மிக்க பூமியை போன்ற புதிய கோள்களை பற்றிய செய்தியை வெளியிட்டுள்ளது. கடந்த புதன்கிழமை அன்று புதிய கோள்கள் கண்டுபிடிப்பு பற்றி நாசா செய்தி வெளியிட்டுள்ளது. அதன் படி செழிப்பான புதிய 715 உலகங்கள் சூரிய குடும்பத்திற்கு வெளியில் இருப்பதாக கூறியுள்ளது.

வழக்கம் போல நாசாவின் கெப்ளர் தொலைநோக்கிதான் இதையும் கண்டுபிடித்துக் கூறியுள்ளது. இதற்காக கெப்ளர் தொலைநோக்கிக் குழுவுக்கு நாசா நன்றி கூறியுள்ளது. கிரகங்கள் பற்றிய புதிய வகை ஆராய்ச்சியில் கெப்ளர் குழுதான் மனிதர்கள் வசிக்கும் தகுதி வாய்ந்த பூமியை போன்ற கிரகங்களை ஆராய உதவி புரிந்து வருகிறது.

இந்த ஆராய்ச்சிதான் நாங்கள் கனிம வளங்கள் நிறைந்த செல்வச்செழிப்பான, மனிதர்கள் வாழத்தகுந்த புதிய கிரகங்களை கண்டறிய உதவி புரிந்தது என்று நாசாவின் விண்வெளி ஆய்வாளர் ஒருவர் கூறியுள்ளார். அப்புதிய 715 கோள்களும் 305 வெவ்வேறான நட்சத்திரங்களை சுற்றி வருகின்றன.

#TamilSchoolmychoice

இந்த புதிய கண்டுபிடிப்பால் கிட்டதட்ட இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட கிரகங்களின் எண்ணிக்கை 1700 ஆக உயர்ந்துள்ளது. இந்த புதிய கிரகங்களில் 95 சதவீத கோள்கள் பூமியை போன்றே பரப்பளவு, தண்ணீர், நிலப்பகுதி ஆகியவற்றை கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதன் மூலம் அங்கு மனிதர்களின் வாழ்க்கை ஆதாரத்திற்கான நிலைமை நிலவுவதாக கூறப்படுகிறது. எனவே “இரண்டாம் உலகம்” நிஜத்திலும் இருக்கலாம் என்று நிரூபித்துள்ளது இந்த புதிய கண்டுபிடிப்பு. சொல்ல முடியாது ஒரு வேளை நம்மை போன்ற உருவ அமைப்பினர் அங்கு வசித்து வரக்கூட சாத்தியம் இருக்கலாம் என நாசா கூறியுள்ளது.