Home உலகம் மனைவிக்கு துப்பாக்கி பயிற்சி அளித்தவர் பலி!

மனைவிக்கு துப்பாக்கி பயிற்சி அளித்தவர் பலி!

479
0
SHARE
Ad

Tamil-Daily-News-Paper_86156427861வாஷிங்டன், பிப் 28 – துப்பாக்கியை பாதுகாப்பாக கையாள்வது குறித்து, மனைவிக்கு பயிற்சி அளித்தவர், தற்செயலாக துப்பாக்கி குண்டுகள் தலையில் பாய்ந்ததில், பரிதாபமாக இறந்தார். அமெரிக்காவின், மிச்சிகன் மாகாணத்தை சேர்ந்த, 36 வயது நபர், தன்னிடம் இருந்த, மூன்று துப்பாக்கிகளை கையாள்வது குறித்து, மனைவிக்கு விளக்கிக் கொண்டிருந்தார்.

இதை அவரது, மூன்று குழந்தைகளும் கவனித்து கொண்டிருந்தனர்.
தோட்டாக்கள் இல்லாத, இரண்டு துப்பாக்கிகளை தலையில் வைத்து, சுட்டுக் காண்பித்துள்ளார். மூன்றாவது கை துப்பாக்கியை வைத்து, சுட முயற்சித்தபோது, தற்செயலாக துப்பாக்கியில் இருந்த குண்டுகள், அவர் தலையை துளைத்தன. இதில், அவர் உயிரிழந்தார். இந்த சம்பவத்தின் போது, அவர் குடிபோதையில் இருந்துள்ளார்.