Home இந்தியா திமுக நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலு மீது இந்தி மொழிபெயர்ப்புக்காக கடுப்பான நிதிஷ்குமார்

திமுக நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலு மீது இந்தி மொழிபெயர்ப்புக்காக கடுப்பான நிதிஷ்குமார்

414
0
SHARE
Ad
டிசம்பர் 19 இந்தியா கூட்டணி கூட்டத்தில் டி.ஆர்.பாலு-ஸ்டாலின்-சோனியா காந்தி

புதுடில்லி : நேற்று செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 19) புதுடில்லியில் இந்தியா கூட்டணி என்ற இந்திய எதிர்க்கட்சிகளின் கூட்டணித் தலைவர்களின் கூட்டம் நடைபெற்றது. இதில் திமுக சார்பில் மு.க.ஸ்டாலினும், திமுக நாடாளுமன்றத் தலைவர் டி.ஆர்.பாலுவும் கலந்து கொண்டனர்.

சுமார் 3 மணி நேரம் நடைபெற்ற இந்தச் சந்திப்பின் போது இந்தியில் உரையாற்றினார் பீகார் முதலமைச்சரும், ஐக்கிய ஜனதா தளம் (யுனைடெட்) தலைவருமான நிதிஷ் குமார். அவர் பேசியது என்னவென்று புரியாததால் அவரின்  உரையின் மொழிபெயர்ப்பைக் கேட்டிருக்கிறார் டி.ஆர்.பாலு. உரையை மொழிபெயர்க்குமாறும் பாலு கேட்டுக் கொண்டார்.

இதனால் கடுப்பான நிதிஷ் குமார் ​​”நாங்கள் எங்கள் நாட்டை இந்துஸ்தான் என்றும், இந்தி எங்கள் தேசிய மொழி என்றும் அழைக்கிறோம். எங்களுக்கு அந்த மொழி தெரிந்திருக்க வேண்டும்” என்று கூறி கொந்தளித்தார்.

#TamilSchoolmychoice

அப்போது தனது பேச்சை மொழிபெயர்க்க வேண்டாம் என்றும் நிதிஷ்குமார் கேட்டுக் கொண்டார்.

வரவிருக்கும் 2024 மக்களவைத் தேர்தலுக்கான தொகுதிப் பங்கீடு மற்றும் பிரச்சார உத்திகள் போன்ற விஷயங்களைப் பற்றி ஆலோசிப்பதற்காக டில்லியில் செவ்வாய்கிழமை நடைபெற்ற நான்காவது கூட்டத்திற்காக இந்தியாவின் எதிரணி அரசியல் கட்சிகள் ஒன்று கூடின.