Home நாடு டாயிம் சைனுடினின் குடும்ப சொத்து இல்ஹாம் அடுக்குமாடிக் கட்டடத்தை ஊழல் தடுப்பு ஆணையம் கைப்பற்றியது

டாயிம் சைனுடினின் குடும்ப சொத்து இல்ஹாம் அடுக்குமாடிக் கட்டடத்தை ஊழல் தடுப்பு ஆணையம் கைப்பற்றியது

382
0
SHARE
Ad
துன் டாயிம் சைனுடின்

கோலாலம்பூர் : முன்னாள் நிதியமைச்சர் துன் டாயிம் சைனுடினின் குடும்பத்திற்குச் சொந்தமான 60 மாடிகள் கொண்ட இல்ஹாம் டவர் என்னும் அடுக்குமாடிக் கட்டடத்தை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் (எம்ஏசிசி) கைப்பற்றியுள்ளது.

ஊழல் தடுப்பு ஆணையத்தின் அறிக்கையின்படி, தங்களுக்கு வழங்கப்பட்ட தகவல்களில் சட்டத்தின் கீழ் ஒரு குற்றத்தைக் கண்டறிந்ததைத் தொடர்ந்து, ஊழல் தடுப்பு நிறுவனம் இல்ஹாம் டவரைக் கைப்பற்றியது.

பாங்குனான் மெனரா இல்ஹாம் கைப்பற்றப்பட்டது குறித்து ஊழல் தடுப்பு ஆணையம் உள்ளூர் ஊடகம் ஒன்றில் டிசம்பர் 21 அன்று வெளியிட்ட விளம்பரத்தில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது.

#TamilSchoolmychoice

ஊழல் தடுப்பு ஆணையத்தால் பறிமுதல் செய்யப்பட்டாலும், மெனரா இல்ஹாமில் “வழக்கம் போல்” வணிகம் நடைபெற்று வருவதாக மெனரா இல்ஹாமில் உள்ள ஒரு அலுவலக ஊழியர் கூறினார்.

இந்த நடவடிக்கை குறித்து டாயிம் சைனுடின் இன்னும் அறிக்கை எதனையும் விடுக்கவில்லை.

சிங்கப்பூரைத் தளமாகக் கொண்ட சேனல் நியூஸ் ஏசியா (சிஎன்ஏ) டாயிம் சைனுடினுக்கு நெருக்கமான நிதி நிர்வாகிகளை மேற்கோள் காட்டி இதன் தொடர்பில் செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது.

டாயிம் சைனுடின் தனது – தனது குடும்பத்தின் நிதிப் பங்குகளை அறிவிக்கும்படி ஊழல் தடுப்பு ஆணையம் விடுத்த உத்தரவை செயல்படுத்த மறுத்ததை அடுத்து, இல்ஹாம் கட்டடம் டிசம்பர் 18-இல் ஊழல் தடுப்பு ஆணையத்தால் கைப்பற்றப்பட்டது.

ரெனாங்-யுஇஎம் ஒப்பந்தத்துடன் தனக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று டாயிம் சைனுடின் எம்ஏசிசி அதிகாரிகளிடம் கூறியதாக சிஎன்ஏ கூறியது.

மெனாரா இல்ஹாம், 580 மில்லியன் அமெரிக்க டாலர் (2.7 பில்லியன் ரிங்கிட்) செலவில் கட்டப்பட்டது என மதிப்பிடப்பட்டுள்ளது. கோலாலம்பூரின் இரட்டைக் கோபுத்தைச் சுற்றியுள்ள முக்கிய பிரதான வணிக மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு அருகில் இல்ஹாம் கட்டடம் அமைந்துள்ளது.

அனைத்துலக புலனாய்வு பத்திரிகையாளர்களின் கூட்டமைப்பு (ICJ) பண்டோரா பேப்பர்ஸ் என்று அழைக்கப்படும் இரகசிய ஆவணங்களை வெளிப்படுத்தியதன் தொடர்ச்சியே இந்த விசாரணை என்று வட்டாரங்கள் தெரிவித்தன.