Home நாடு நள்ளிரவில் ‘கெல்லிஸ் மாளிகை’ யை சுற்றிப் பார்க்கும் புதிய திட்டம்!

நள்ளிரவில் ‘கெல்லிஸ் மாளிகை’ யை சுற்றிப் பார்க்கும் புதிய திட்டம்!

571
0
SHARE
Ad

mainஈப்போ, மார்ச் 1 – பேராக் மாநிலத்திலுள்ள கெல்லிஸ் மாளிக்கையை இரவில் சுற்றிப்பார்க்கும் ஒரு புதிய திட்டத்தை சுற்றுலாத்துறை முதல் முறையாக அறிமுகப்படுத்தியுள்ளது.

இது குறித்த அறிமுக விழாவில் பேசிய அம்மாளிகையின் மேலாளர் ஸாம்ரி முஹ்யி, “இது பார்வையாளர்களை அச்சமூட்டுவதற்கு செய்யப்பட்ட திட்டம் அல்ல. மாறாக நள்ளிரவில், இருட்டான அறைகளில் இங்குள்ள அமானுஷ்யங்களை அறிந்து கொள்ளும் ஒரு புதுமையான அனுபவத்தை அவர்களுக்கு கொடுக்க வேண்டும் என்ற நோக்கத்தில் செய்யப்படுகின்றது” என்று தெரிவித்தார்.

இந்நிகழ்வில் கலந்து கொண்ட செய்தியாளர்கள், அங்குள்ள அமானுஷ்யங்களை உணரும் வகையில், நான்கு அறைகளில் தலா இரு செய்தியாளர்கள் சுமார் 15 நிமிடங்களுக்கு அமர்த்தப்பட்டனர்.

#TamilSchoolmychoice

மாதத்தில் நான்கு நாட்கள் மட்டுமே பார்வையாளர்களுக்கு அனுமதி வழங்கப்படவுள்ளது. மாதத்தின் முதல் வாரத்தில் இரண்டு நாட்களும், கடைசி வாரத்தில் இரண்டு நாட்களும் வழங்கப்படும் என்று ஸாம்ரி தெரிவித்தார்.