Home இந்தியா ஜெயலலிதா பிரதமராக போவதால் இந்த ஆண்டு மறக்க முடியாத ஆண்டாக அமையும்-நடிகர் ராமராஜன்!

ஜெயலலிதா பிரதமராக போவதால் இந்த ஆண்டு மறக்க முடியாத ஆண்டாக அமையும்-நடிகர் ராமராஜன்!

627
0
SHARE
Ad

24-lifetime-achievement-award-ramarajan-240902தர்மபுரி, மார் 4 – இந்த 2014 ஆம் ஆண்டு அனைத்து மக்களுக்கும் மறக்க முடியாத ஆண்டாக அமையும் என நடிகர் ராமராஜன் தெரிவித்துள்ளார். தமிழக முதல்வர் ஜெயலலிதா பிரதமராக போவதால் 2014 ஆம் ஆண்டு மறக்க முடியாத ஆண்டாக அமையும் என்று அதிமுக பொதுக்கூட்டத்தில் நடிகர் ராமராஜன் பேசினார்.

தர்மபுரி மாவட்டம் காரிமங்கலத்தில் முதல்வர் ஜெயலலிதா பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. இதில் கலந்து கொண்ட அதிமுக தலைமை கழக பேச்சாளர் நடிகர் ராமராஜன் பேசியபோது, “கடந்த 1972 ஆம் ஆண்டு எம்ஜிஆர் அதிமுகவை தொடங்கினார். முக்கியத்துவம் வாய்ந்த அந்த நிகழ்ச்சியை தமிழகம் மறக்க முடியாது.

நாடாளுமன்ற தேர்தலில் தமிழக முதல்வர் ஜெயலிதா பிரதமராகப் போவது உறுதி. இதனால் 2014 ஆம் ஆண்டும் தமிழக மக்களுக்கு மறக்க முடியாத ஆண்டாக அமையும்” என்று ராமராஜன் கூறினார்.