Home உலகம் தலிபான்கள் போர் நிறுத்தம் எதிரொலி- விமான தாக்குதலை நிறுத்தி வைக்க பாகிஸ்தான் முடிவு

தலிபான்கள் போர் நிறுத்தம் எதிரொலி- விமான தாக்குதலை நிறுத்தி வைக்க பாகிஸ்தான் முடிவு

472
0
SHARE
Ad

alikhanஇஸ்லாமாபாத், மார் 4 – தலிபான்கள் ஒரு மாத போர்நிறுத்த அறிவிப்பை தொடர்ந்து பாகிஸ்தான் அரசு தரப்பிலும் தலிபான்கள் மீதான விமான தாக்குதலை நிறுத்தி வைக்க முடிவு செய்துள்ளதாக உள்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த 8 ஆண்டுகளுக்கும் மேலாக தாக்குதல் நடத்தி வரும் தலிபான்களுடன் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு பேச்சு வார்த்தை நடத்த பாகிஸ்தான் அரசு தரப்பில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.

இந்நிலையில் பாகிஸ்தானின் எல்லைப்படை வீரர்கள் 23 பேரை கடத்தி சென்று தலிபான் தீவிரவாதிகள் தலையை வெட்டி கொன்றதையடுத்து பேச்சு வார்த்தை முறிந்தது. மேலும் இரு தரப்பிலும் மாறி மாறி தாக்குதல்களும் நடைபெற்றன. தலிபான் மறைவிடங்களை நோக்கி கடந்த சில நாட்களாக பாகிஸ்தான் ராணுவ விமானங்கள் தாக்குதல் நடத்தி வருகின்றன.

இதற்கிடையில் இரு தினங்களுக்கு முன்பு பேச்சு வார்த்தைக்கு சம்மதம் தெரிவித்து ஒரு மாத கால போர்நிறுத்தத்தை அறிவித்துள்ளதாக தெஹ்ரிக் இ தலிபான் அமைப்பின் செய்தி தொடர்பாளர் ஷகிதுல்லா ஷாகித் அறிவித்திருந்தார். இந்த அறிவிப்பிற்கு பாகிஸ்தான் அரசு வரவேற்பு தெரிவித்துள்ளது.

#TamilSchoolmychoice

இதுகுறித்து பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் சவுத்ரி நிசார் அலிகான் விடுத்துள்ள அறிக்கையில் கூறியதாவது, தலிபான்களின் இந்த அறிவிப்பு மிகவும் வரவேற்க கூடிய ஒன்றாகும். இதனையடுத்து கடந்த சில நாட்களாக பாகிஸ்தான் அரசு நடத்தி வந்த வான்வழி தாக்குதல்கள் நிறுத்தி வைக்கப்படும் என்று தெரிவித்தார்.ஆனாலும் ராணுவம் எப்போதும் தயார் நிலையில் இருக்கும்.

தலிபான்கள் வன்முறை சம்பவங்களில் ஈடுபட்டால் ராணுவமும் தக்க பதிலடி தரும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளார். இது இருதரப்பு உறவில் முன்னேற்றம் ஏற்படுவதற்கான சாதகமான நிலை. இந்த சூழலை பயன்படுத்திக் கொண்டு இரு தரப்பிலும் பேச்சு வார்த்தையை விரைந்து தொடங்க முன்வர வேண்டும் என்று சமரச பேச்சுவார்த்தை குழுவின் உறுப்பினர் ரஹிமுல்லா யூசுப்சாய் கோரிக்கை விடுத்துள்ளார்.