Home நாடு “எனது கருத்தை திரித்து வெளியிட்டுள்ளார்” – காடிர் ஜாசினை சாடிய அன்வார்

“எனது கருத்தை திரித்து வெளியிட்டுள்ளார்” – காடிர் ஜாசினை சாடிய அன்வார்

591
0
SHARE
Ad

f1b6கோலாலம்பூர், மார்ச் 4 – மகாதீர் குறித்து தான் கூறிய கருத்தை மூத்த செய்தித் தொகுப்பாளரான காடிர் ஜாசின் (படம்) திரித்து வெளியிட்டுவிட்டதாக அன்வார் கூறியுள்ளார்.

நேற்று இரவு நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டு பேசிய அன்வார், “மகாதீரின் அறிக்கைக்கு நான் விளையாட்டாக பதில் கூறினேன். அது எல்லோருக்கும் தெரியும். ஆனால் இவரெல்லாம் எப்படி பத்திரிக்கையாளர் ஆனார் என்பது கடவுளுக்கு தான் தெரியும்” என்று காடிர் ஜாசின் குறித்து அன்வார் விமர்சித்தார்.

அன்வாருக்கு அளிக்கும் வாக்கு அமெரிக்காவுக்கு அளிக்கும் வாக்கு என்ற மகாதீரின் கருத்துக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, தான் மலேசியாவின் 1 ரிங்கிட்டை, 1 அமெரிக்க டாலருக்கு நிகராக மாற்றுவேன் என்று கூறியதாக அன்வார் விளக்கமளித்தார்.

#TamilSchoolmychoice

அன்வாரின் இந்த கருத்து குறித்து நேற்று தனது இணையத்தளத்தில் கருத்துரைத்த காடிர் ஜாசின், காஜாங் இடைத்தேர்தலில் வெற்றி பெற்றால், 1 மலேசிய ரிங்கிட்டை, 1 அமெரிக்க டாலருக்கு நிகராக மாற்றுவேன் என்று அன்வார் கூறுவது முட்டாள்தனமானது. எந்த ஒரு முன்யோசனையும் இன்றி, தனது பேச்சால் எல்லோரையும் விழுங்கி விடலாம் என்று அன்வார் நினைக்கிறார் என கடுமையாக விமர்சித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.