Home வணிகம்/தொழில் நுட்பம் பிரிட்டனில் 152 Mbps அதிவேக இணைய சேவை!

பிரிட்டனில் 152 Mbps அதிவேக இணைய சேவை!

476
0
SHARE
Ad

Virgin_Mediaமார்ச் 5 – பிரிட்டனின் மிகப் பெரிய பிராட்பேண்டு இணைய சேவை நிறுவனமான விர்ஜின் மீடியா, தங்களது வாடிக்கையாளர்களுக்கு முற்றிலும் இலவசமாக, அதிவேக இணைய சேவையை அறிமுகம் செய்யவுள்ளது.

வாடிக்கையாளர்கள் பெற்றுள்ள இணைய சேவை திட்டத்தின் அடிப்படையில், அவர்களுக்கு 66 சதவிகிதம் கூடுதலாக இந்த இணைய சேவையை வழங்குகின்றது.

அதாவது  இணைய சேவையை 30 Mbps வரை வைத்திருக்கும் வாடிக்கையாளர்களுக்கு 50 Mbps யாக உயர்த்துகின்றது.

#TamilSchoolmychoice

50 Mbps உள்ளவர்களுக்கு 100 Mbps ஆகவும், 100 Mbps வைத்திருப்பவர்களுக்கு 152 Mbps ஆகவும் இணைய சேவையின் வேகத்தை உயர்த்துகின்றது.

இதன் மூலம் நிமிட நேரத்தில் தொலைக்காட்சி நாடகங்கள், படங்கள் போன்றவற்றை பதிவிறக்கம் செய்யலாம் என்றும் அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

கடந்த 2007 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இந்நிறுவனத்தில், தற்போது வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை 55 சதவிகிதம் அதிகரித்திருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்னும், 12 மாதங்களில் வாடிக்கையாளர்கள் இந்த அதிவிரைவு இணைய சேவையை பெறலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.