Home உலகம் சீனாவுக்கு எதிராக புத்ததுறவி தீக்குளிப்பு

சீனாவுக்கு எதிராக புத்ததுறவி தீக்குளிப்பு

661
0
SHARE
Ad

burn-selfகாத்மாண்டு, பிப்.14- திபெத் நாட்டை 60 ஆண்டுகளுக்கு முன்பு சீனா ஆக்கிரமித்து கொண்டது.

இதனால் ஏராளமான திபெத்தியர்கள் அங்கிருந்து வெளியேறினார்கள்.

திபெத்துக்கு சுதந்திரம் அளிக்க வேண்டும் என்று அவர்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர்.

#TamilSchoolmychoice

2009-ம் ஆண்டிலிருந்து புதுவிதமான போராட்டங்களில் அவர்கள் ஈடுபட்டு வருகிறார்கள்.

சிலர் தீக்குளித்து உயிரை மாய்த்து கொண்டு தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்துகிறார்கள்.

இந்த நிலையிலும் நேபாளம் தலைநகரம் காத்மாண்டில் 20 வயது மதிக்கதக்க புத்த துறவி ஒருவர் தீக்குளித்தார்.

அங்குள்ள ஓட்டலுக்கு சென்ற அவர் கழிவறைக்கு சென்று தன் உடலில் பெட்ரோல் ஊற்றி தீவைத்தார்.

பின்னர் எரிந்த தீயுடன் அவர் தெருவில் ஓடினார். போலீசார் தீயை அணைத்து அவரை ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அவர் உயிருக்கு போராடி வருகிறார்.

2009-ம் ஆண்டுக்கு பிறகு இதுவரை 100 புத்த துரவிகள் இதேபோல் தீக்குளித்துள்ளனர். என்பது குறிப்பிடத்தக்கது.