Home கலை உலகம் ‘நிமிர்ந்து நில்’ இன்று வெளியாகவில்லை!

‘நிமிர்ந்து நில்’ இன்று வெளியாகவில்லை!

730
0
SHARE
Ad

Nimirnthu-Nilகோலாலம்பூர், மார்ச் 7 – சமுத்திரக்கனி இயக்கத்தில், ஜெயம் ரவி, அமலா பால், சரத்குமார், பரோட்டா சூரி ஆகியோர் நடிப்பில் உருவான ‘நிமிர்ந்து நில்’ திரைப்படம் இன்று மலேசியா முழுவதும் வெளியாக இருந்தது.

தமிழ் பத்திரிக்கைகளில் அதற்கான விளம்பரமும் வெளியிடப்பட்டிருந்தது. ஆனால் கோலாலம்பூரில் உள்ள பிரபல திரையரங்கிற்கு படம் பார்க்கச் சென்ற போது, படம் இன்று வெளியாகவில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளதாக செல்லியல் வாசகர் ஒருவர் தற்போது நமக்கு தகவல் அனுப்பியுள்ளார்.

தமிழகத்தில் நிமிர்ந்து நில் திரைப்படத்திற்கு ஏற்பட்ட சிக்கல் காரணமாக படம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

#TamilSchoolmychoice

வாழ்க்கையில் எந்த சந்தர்ப்பத்திலும் நிமிர்ந்து நிற்க வேண்டும் என்ற கருத்தை அடிப்படையாகக் கொண்டு இப்படம் உருவாக்கப்பட்டுள்ளதாக அண்மையில் பேட்டி ஒன்றில் இயக்குநர் சமுத்திரக்கனி கூறினார்.

இப்படத்தில் ஜெயம் ரவி இரட்டை வேடத்தில் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.