Home கலை உலகம் நகைச்சுவை நடிகர் பாலாஜி மரணம்!

நகைச்சுவை நடிகர் பாலாஜி மரணம்!

596
0
SHARE
Ad

NT_140307110834000000 (1)சென்னை, மார்ச் 7 – சன் டிவியின் சூப்பர் 10 உள்ளிட்ட பல நகைச்சுவைத் தொடர்களில் நடித்து பிரபலமானவர் நடிகர் பாலாஜி (வயது 43).

கடந்த சில நாட்களாக மஞ்சள் காமாலை நோயினால் அவதிப்பட்டு, தனியார் மருத்துவமனை ஒன்றில் தீவிர சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் சிகிச்சை பலன் இன்றி இன்று காலை 8 மணியளவில் மரணமடைந்தார்.

சிலம்பாட்டம், திண்டுக்கல் சாரதி உள்ளிட்ட பல்வேறு படங்களில் பாலாஜி நடித்துள்ளார். அதோடு கடந்த ஆண்டு வெளிவந்த தில்லு முல்லு படத்தின் நகைச்சுவை வசனங்களையும் இவர் எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

#TamilSchoolmychoice

மறைந்த பாலாஜியின் உடல் சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. அவருக்கு ஒரு மனைவியும், மூன்று குழந்தைகளும் உள்ளனர். பாலாஜியின் இறுதிச்சடங்கு நாளை(மார்ச் 8ம் தேதி) நடைபெறுகிறது.