Home இந்தியா ஜெயலலிதா பிரதமராவதற்கு ஆதரவு, மம்தா பானர்ஜி திடீர் அறிவிப்பு!

ஜெயலலிதா பிரதமராவதற்கு ஆதரவு, மம்தா பானர்ஜி திடீர் அறிவிப்பு!

539
0
SHARE
Ad

jayalalitha-mamtha-1கொல்கத்தா, மார்ச் 7 – மேற்கு வங்காள முதல்–மந்திரியும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி ஒரு தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்தார். அப்போது,  தமிழக முதல்–அமைச்சர் ஜெயலலிதா பிரதமராவதற்கு ஆதரவு அளிப்பீர்களா?’ என்ற கேள்விக்கு மம்தா கூறியதாவது, அவரை ஆதரிப்பதில் எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை.

எனக்கு தலைமை பதவி மீது அக்கறை இல்லை. மக்களை பற்றித்தான் கவலைப்படுகிறேன். நான், ஜெயலலிதா, மாயாவதி ஆகியோர் பலம் வாய்ந்த பெண்மணிகள் என்பதால், ஒன்றாக பணியாற்ற மாட்டோம் என்று கூறுவது தவறு. வாஜ்பாய் ஆட்சிக்காலத்தில் நாங்கள் ஒன்றாக பணியாற்றி இருக்கிறோம். எனவே, நாங்கள் சேர்ந்து பணியாற்ற முடியும். எங்களுக்குள் சண்டை வராது.

அவர்கள் பிரதமராக விரும்பினால், நான் ஆதரவு அளிக்கத்தயார். எந்த பிரச்சனையும் இல்லை. இப்போது இருக்கும் பதவியே எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது. எனவே, நாட்டை முன்னேற்ற ஆட்சி அமைக்கும் யாருக்கும், நான் ஆதரவு அளிக்கத்தயார். ஆனால், நரேந்திரமோடி அரசை நான் ஆதரிக்க வாய்ப்பில்லை என மம்தா பானர்ஜி கூறினார்.

#TamilSchoolmychoice