Home இந்தியா மோடி பதவி விலக வேண்டும் – 29 தொகுதிகளை வென்ற மமதா பானர்ஜி கோரிக்கை

மோடி பதவி விலக வேண்டும் – 29 தொகுதிகளை வென்ற மமதா பானர்ஜி கோரிக்கை

253
0
SHARE
Ad
மமதா பானர்ஜி

புதுடில்லி : மேற்கு வங்காளத்தில் உள்ள 42 தொகுதிகளில் பெரும்பான்மை தொகுதிகளை பாஜக வெல்லும் என கருத்துக் கணிப்புகள் வெளியிடப்பட்டிருந்த நிலையில் இன்று (ஜூன் 4) இறுதி நிலவரப்படி 29 தொகுதிகளைக் கைப்பற்றி சாதனை புரிந்திருக்கிறார் திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மமதா பானர்ஜி.

மேற்கு வங்காளத்தில் 12 தொகுதிகளை மட்டுமே பாஜக கைப்பற்றியது. ஒரே ஒரு தொகுதியில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றது.

இந்த வெற்றியைத் தொடர்ந்து மமதா, உத்தரப் பிரதேசத்தில் வெற்றி பெற்ற அகிலேஷ் யாதவ்வுக்கு தொலைபேசி மூலம் வாழ்த்து தெரிவித்ததாக தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

இந்தப் பொதுத் தேர்தல் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கான தோல்வி என்பதால் அவர் உடனடியாகப் பதவி விலக வேண்டும் எனவும் மமதா வேண்டுகோள் விடுத்தார்.