Home இந்தியா ஆந்திரா சட்டமன்றம் : மீண்டும் முதலமைச்சராகிறார் சந்திரபாபு நாயுடு -161 தொகுதிகளில் வெற்றி!

ஆந்திரா சட்டமன்றம் : மீண்டும் முதலமைச்சராகிறார் சந்திரபாபு நாயுடு -161 தொகுதிகளில் வெற்றி!

556
0
SHARE
Ad
சந்திரபாபு நாயுடு

அமராவதி : ஆந்திரப் பிரதேசத்திற்கான சட்டமன்றத் தேர்தலில் சந்திரபாபு தலைமையிலான தெலுகு தேசம் கட்சி கூட்டணி 161 தொகுதிகளைக் கைப்பற்றி சாதனை புரிந்தது.

நடப்பு முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டியின் ஓய்எஸ்ஆர் காங்கிரஸ் 14 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது.

இதனைத் தொடர்ந்து சந்திரபாபு நாயுடு மீண்டும் ஆந்திராவின் முதலமைச்சராகப் பதவியேற்கிறார்.

#TamilSchoolmychoice

அதே வேளையில் ஆந்திராவின் நாடாளுமன்றத் தொகுதிகளிலும் தெலுகு தேசம் கட்சி மொத்தமுள்ள 25 தொகுதிகளில் 21 தொகுதிகளில் வெற்றி பெற்றது.

இதைத் தொடர்ந்து மத்தியில் ஆட்சி அமைக்க தனிப்பெரும்பான்மையை பாஜக பெற இயலாத நிலையில் சந்திரபாபு நாயுடுவின் தெலுகு தேசம் மத்திய அரசாங்கத்தில் முக்கியப் பங்கு வகிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மே 13-ஆம் தேதி நடைபெற்ற 4-வது கட்ட வாக்களிப்பில் ஆந்திரா பிரதேச வாக்காளர்கள் வாக்களித்தனர்.

ஆந்திராவின் சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்களிப்பும் மே 13-ஆம் தேதி நடைபெற்றது.

ஆந்திராவில் பாஜக-தெலுகு தேசம்- நடிகர் பவன் கல்யாணின் ஜனசேனா ஆகிய மூன்று கட்சிகள் இணைந்த கூட்டணி போட்டியிட்டன.

நடப்பு ஆந்திரா முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் சட்டமன்றத் தேர்தலில் படுமோசமான தோல்வியைத் தழுவியிருக்கிறது. மொத்தமுள்ள 175 தொகுதிகளில் 14 தொகுதிகளை மட்டுமே ஓய்எஸ்ஆர் கைப்பற்றியிருக்கிறது.