Home இந்தியா இந்திய நாடாளுமன்றம் : பாஜக கூட்டணி 292 – காங்கிரஸ் கூட்டணி 234 – மற்றவை...

இந்திய நாடாளுமன்றம் : பாஜக கூட்டணி 292 – காங்கிரஸ் கூட்டணி 234 – மற்றவை 17

229
0
SHARE
Ad

புதுடில்லி : இந்திய நாடாளுமன்றத் தேர்தல்களுக்கான இறுதி முடிவுகள் வெளியிடப்பட்டுக் கொண்டிருக்கும் நிலையில் பாஜக கூட்டணி 291 தொகுதிகளில் வெற்றி பெற்றிருக்கிறது அல்லது முன்னணி வகிக்கிறது.

காங்கிரஸ் கூட்டணி 198 தொகுதிகளில் வெற்றி பெற்றிருக்கிறது அல்லது முன்னிலை வகிக்கிறது. மற்ற கட்சிகள் 18 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளன அல்லது முன்னணி வகிக்கின்றன.

அடுத்து ஆட்சி அமைப்பது யார் என்ற பரபரப்பு புதுடில்லியின் பரவத் தொடங்கியுள்ளது. புதன்கிழமை (ஜூன் 5) காலை 11.30 மணியளவில் பாஜக மத்திய அரசாங்கத்தின் அமைச்சரவைக் கூட்டம் நடைபெறவிருக்கிறது. புதிய பிரதமரும் அமைச்சர்களும் நியமிக்கப்படும் வகையில் நடப்பு அமைச்சரவை ராஜினாமா செய்யும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

#TamilSchoolmychoice

இதற்கிடையில் இந்தியா கூட்டணி தலைவர்களின் சந்திப்பும் புதன்கிழமை (ஜூன் 5) நடைபெறுகிறது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலினும் இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்ள புதன்கிழமை காலை புதுடில்லி புறப்படுகிறார். அடுத்த மத்திய அரசாங்கத்தை அமைக்க ந்தியா கூட்டணி முயற்சி செய்கிறது என்ற அறிவிப்புகளும் வெளியாகியுள்ளன.

தேர்தல் முடிவுகள் வெளியிடப்பட்ட செவ்வாய்க்கிழமை இரவு (ஜூன் 4) புதுடில்லி பாஜக தலைமையகத்தில் நடைபெற்ற பிரம்மாண்டமான கூட்டத்திற்கு வருகை தந்து மோடி உரையாற்றினார்.

3-வது முறையாக மோடியே பிரதமராகும் அதிகாரத்தை மக்கள் என்டிஏ என்னும் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு வழங்கியிருக்கிறார்கள் என பாஜக தலைவர்கள் முழங்கியிருக்கின்றனர்.