மார்ச் 8 – இன்னும் 6 மாதங்களில் விண்டோஸ் மற்றும் ஆண்டிராய்டு என இரண்டு இயங்குதளங்களைக் கொண்ட டூயல் பூட் (Dual boot) திறன்பேசிகள் வெளிவரும் என்று எதிர்பார்க்கபப்டுகின்றது.
இந்தியாவைச் சேர்ந்த கார்போன் நிறுவனம் இந்த வகை செல்பேசியை வெளியிடவுள்ளதாக அண்மையில் மைக்ரோசாப்ட் நிறுவனம் அறிவித்துள்ளது.
மைக்ரோசாப்ட் நிறுவனத்துடன் கார்போன் நிறுவனம் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளதாகவும், விண்டோஸ் மற்றும் ஆண்டிராய்டு என இரண்டு இயங்குதளங்களையும் பயன்படுத்தும் வகையிலான செல்பேசிகளை இன்னும் 6 மாதங்களில் அறிமுகப்படுத்தப்படவுள்ளதாகவும் ‘தி டைம்ஸ் ஆப் இந்தியா’ செய்தி வெளியிட்டுள்ளது.
அதே வேளையில், இந்த வகை திறன்பேசியைத் தயாரிக்க நோக்கியா மற்றும் ஹெச்டிசி ஆகிய நிறுவனங்களும் ஆர்வம் காட்டி வருவதாகவும், விரைவில் அதற்கான அறிவிப்பும் வெளியாகலாம் என்றும் கூறப்படுகின்றது.