Home இந்தியா பெண்களுக்கு எதிரான தவறான எண்ணத்தை மாற்ற சமூகம் பாடுபட வேண்டும்-பிரணாப் முகர்ஜி!

பெண்களுக்கு எதிரான தவறான எண்ணத்தை மாற்ற சமூகம் பாடுபட வேண்டும்-பிரணாப் முகர்ஜி!

586
0
SHARE
Ad

pranab-mukherjeeபுதுடெல்லி, மார்ச் 8 – ‘பெண்கள் பற்றிய எதிர்மறையான எண்ணத்தை மாற்ற பாடுபட வேண்டும்’ என்று அதிபர் பிரணாப் முகர்ஜி வலியுறுத்தியுள்ளார். சர்வதேச பெண்கள் தினத்தை முன்னிட்டு நேற்று அவர் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியிருப்பதாவது, கடந்த கால இந்தியாவில் அரசியல், கல்வி, ஆன்மீக துறைகளில் பெண்கள் மிக உயர்ந்த நிலையை அடைந்திருக்கிறார்கள்.

பொது வாழ்க்கையில் ஆண்களுக்கு சமமாக ஈடுபட்டார்கள். முழு சுதந்திரத்தை அனுபவித்தார்கள். இந்திய அரசியல் சட்டத்தில் பெண்களுக்கு பாலின சமநிலை அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது. பெண்களுக்கு எதிராக சமூகத்தில் நிலவும் எதிர்மறையான கருத்துக்களையும், எண்ணத்தையும் மாற்ற பாடுபட வேண்டும்.

அவர்களுக்கு பாதுகாப்பளிக்க வேண்டும். அவர்கள் தங்களுடைய திறமையை வெளிப்படுத்துவதற்கான சாதகமான சூழ்நிலையை உருவாக்க வேண்டும். இதன் மூலம், நம் நாட்டை கட்டமைப்பதில் பெண்களும் தங்களுடைய முழு பங்களிப்பை வழங்க முடியும். பெண்களின் பாதுகாப்புக்காகவும், அவர்களின் நலவாழ்வுக்காகவும் எடுக்கப்பட்டு வரும் முயற்சியை இரட்டிப்பாக்க, சர்வதேச பெண்கள் தினமான இன்று அனைவரும் உறுதி எடுக்க வேண்டும் என பிரணாப் கூறியுள்ளார்.