Home நாடு செல்லியல் வாசகர்களுக்கு மகளிர் தின நல்வாழ்த்துக்கள்!

செல்லியல் வாசகர்களுக்கு மகளிர் தின நல்வாழ்த்துக்கள்!

935
0
SHARE
Ad

19723மார்ச் 8 – ஆண்டு தோறும் மார்ச் 8-ஆம் தேதியன்று உலகெங்கும் மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது. ஐக்கிய நாடுகள் சபையால் அறிவிக்கப்பட்ட இந்த நாளில் பல நாடுகளில் பொது விடுமுறை நாளாகும். பெண்களுக்கான சமத்துவம், உரிமைகளை வலியுறுத்துவதற்காகவும் மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது. கடந்த 18-ஆம் நூற்றாண்டில் தொழிற்சாலைகள் மற்றும் அலுவலகங்களில் ஆண்கள் மட்டுமே பணியாற்றினர்.

வீட்டு வேலைகளை செய்வதற்காக பெண்களை வீட்டுக்குள்ளேயே முடக்கி வைத்திருந்தனர். பெரும்பாலான பெண்களுக்கு ஆரம்ப கல்வி கூட தரப்படாமல் மறுக்கப்பட்டது. 1857-ஆம் ஆண்டு நிலக்கரி சுரங்கங்கள், தொழிற்சாலைகள், நிறுவனங்களில் பணி வாய்ப்பு தரப்பட்டது.  ஆனால் ஆண்களுக்கு நிகராக, ஊதியத்தில் பெண்களுக்கு அநீதி இழைக்கப்பட்டது.

ஆண்களுக்கு இணையான ஊதியம், உரிமைகள் வழங்கக்கோரி அமெரிக்காவில் 1857-ஆம் ஆண்டு மார்ச் 8-ஆம் தேதி கிளர்ச்சியில் ஈடுபட்டனர். அதன் பிறகு 1907-ஆம் ஆண்டு சம ஊதியம், சம உரிமை கேட்டு பெண்கள் போராடத் தொடங்கினர். 1910-ஆம் ஆண்டு டென்மார்க் நாட்டில், பெண்கள் உரிமை மாநாடு நடந்தது.

#TamilSchoolmychoice

1920-ஆம் ஆண்டு சோவியத் ரஷ்யாவில் செயின்ட் பீட்டர்ஸ் நகரில் நடந்த பெண்களின் போராட்டத்தில் கலந்து கொண்ட ரஷ்யாவின் அலெக்ஸ்சாண்டிரா கெலன்ரா, ஆண்டுதோறும் மார்ச் 8-ஆம் தேதி உலக மகளிர் தினத்தை கொண்டாட வேண்டும் என்று பிரகடனம் செய்தார். இதையடுத்து 1921-ஆம் ஆண்டு முதல் மார்ச் 8-ஆம் தேதி உலக மகளிர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.

1975-ஆம் ஆண்டை சர்வதேச மகளிர் ஆண்டாக ஐ.நா பிரகடனப்படுத்தியது. 150 ஆண்டு கால போராட்டத்தில் மகளிர் தினம் கிடைத்தது. தற்போது ரஷ்யா, உக்ரைன், உஸ்பெஸ்கிஸ்தான், வியட்நாம், ஆப்கானிஸ்தான் உள்பட பல நாடுகளில் சர்வதேச மகளிர் தினத்துக்கு விடுமுறை வழங்கப்படுகிறது.