Home நாடு இங்கிலாந்து போட்டியில் லீ சாங் வெய் வெற்றி வாகை சூடினார்!

இங்கிலாந்து போட்டியில் லீ சாங் வெய் வெற்றி வாகை சூடினார்!

506
0
SHARE
Ad

1.11மார்ச் 10 – மலேசியாவைச் சேர்ந்த உலகப் புகழ் பெற்ற பூப்பந்து விளையாட்டு வீரர் லீ சாங் வெய், நேற்று இங்கிலாந்தில் நடைபெற்ற ஆண்களுக்கான அகில இங்கிலாந்து பூப்பந்துப் போட்டியில் முதல் நிலையில் வெற்றி பெற்று மூன்றாவது முறையாகப் பட்டத்தை தட்டிச் சென்றார்.

சீனாவைச் சேர்ந்த 25 வயதான சென் லோங்கை 21-13, 21-18 என்ற புள்ளிக் கணக்கில் தோற்கடித்தார்.

சென் லோங் கடந்த 2013 ஆம் ஆண்டு நடந்த போட்டியில் வெற்றி பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

#TamilSchoolmychoice