கோலாலம்பூர், மார்ச் 10 – மாயமான MH370 விமானத்தில் போலி கடப்பிதழில் பயணம் செய்த இரு வெளிநாட்டவர்களின் புகைப்படங்களை வெளியிட மலேசியா முடிவு செய்துள்ளது.
இன்று நடந்த செய்தியாளர் கூட்டத்தில் பேசிய போக்குவரத்துத் துறை அமைச்சர் டத்தோஸ்ரீ ஹிஷாமுடின் ஹுசைன், கேஎல்ஐஏ விமான நிலையத்தின் சோதனையில் பதிவாகியுள்ள அந்த இருவரின் புகைப்படங்களை அனைத்துலக குற்றப்புலனாய்வுத் துறையிடம் சமர்ப்பித்துள்ளோம். அந்த இருவருக்கும் தீவிரவாதிகளுக்கும் தொடர்பு உள்ளதா என்றும் விசாரணை நடத்தி வருகின்றோம். செய்தியாளர்களுக்கு விரைவில் அவர்களது புகைப்படங்களை வெளியிடுவோம்” என்று தெரிவித்துள்ளார்.
ஆனால் எப்போது அந்த புகைப்படங்கள் வெளியிடப்படும் என்று கூற ஹிஷாமுடின் மறுத்துவிட்டார்.
அதே வேளையில், அந்த இருவரும் ஆசியர்கள் போல் தோற்றமளிக்கும் போது, எப்படி ஐரோப்பிய கடப்பிதழ் வைத்திருக்கும் அவர்களை குடிநுழைவுத்துறை அதிகாரிகள் அனுமதித்தனர் என்று உள்துறை அமைச்சர் கூறியிருப்பது குறித்து செய்தியாளர்கள் கேட்ட போது, அது பற்றி அவரிடம் தான் கேட்க வேண்டும் என்று ஹிஷாமுடின் கூறியுள்ளார்.