லக்னோ, மார்ச் 23 – பஞ்சாப் மாநிலம் ஜலந்தரை சேர்ந்த பூட்டா சிங், ஒரு காலத்தில் காங்கிரசின் முன்னனி தலைவர்களில் ஒருவராக விளங்கினார். கடந்த 1962 முதல் 8 முறை நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள இவர்,
ராஜீவ் காந்தி அமைச்சரவையில், விவசாயத்துறை அமைச்சராகவும் (1984-86), உள்துறை அமைச்சராகவும் (1986-89) பதவி வகித்தார். மேலும் கடந்த 2004 முதல் 2006 வரை பீகார் மாநில ஆளுனராக இருந்தார், பின்னர் 2007 முதல் 2010 வரை, தேசிய பழங்குடியின ஆணைய தலைவராகவும் பதவி வகித்து வந்தார்.
இந்தநிலையில் வருகிற தேர்தலில் அவர், ராஜஸ்தான் மாநிலம் ஜலோர் தொகுதியில், சமாஜ்வாடி கட்சி சார்பில் போட்டியிடுகிறார். இதை அக்கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் ராம் கோபால் யாதவ் உறுதி செய்துள்ளார்.