Home இந்தியா சோனியா காந்தி எப்படி இவ்வளவு பெரிய பணக்காரரானார்? மேனகா காந்தி கேள்வி!

சோனியா காந்தி எப்படி இவ்வளவு பெரிய பணக்காரரானார்? மேனகா காந்தி கேள்வி!

570
0
SHARE
Ad

8fba6379-7611-416f-a782-0f7c334a93fe_S_secvpfபிலிபிட், மார்ச் 23 – சஞ்சய்காந்தியின் மனைவி மேனகா காந்தி  பாரதீய தலைவர்களில் ஒருவரான இவர்  பிலிபிட் தொகுதியில் போட்டியிடுகிரார். நேற்று அவர்  தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.

பின்னர் அவர்  பிரசார கூட்டத்தில்  பேசினார். அப்போது அவர் கூறியதாவது, .சோனியாகாந்தி இந்த  நாட்டின் மருமகளாக இத்தாலியில் இருந்து இந்தியாவுக்கு வந்த போது எதையும் கொண்டு வரவில்லை.

வெறும் கையை வீசிக் கொண்டுதான் வந்தார். அவர் மீது இந்திய மக்கள் அனைவரும் அன்பு மழை பொழிந்தனர். சோனியா அதற்கு ஏற்ப நடந்து கொண்டாரா என்றால் இல்லை.

#TamilSchoolmychoice

இன்று உலகப் பெண் மணிகளில் 6-வது பணக்காரராக சோனியா உள்ளார் என்று பத்திரிக்கை ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. அவருக்கு இவ்வளவு பணம்  எப்படி வந்தது?

சோனியா திருமணம் முடிந்து வந்த போது ஒருபைசா கூட வரதட்சணை பெற்று வரவில்லை. அப்படிப் பட்டவருக்கு இவ்வளவு பணம் எப்படி வந்தது என்று தெரியவில்லை. நாட்டின் மின் திட்டங்கள், சாலை திட்டங்கள், கல்வித் திட்டங்களில் மாபெரும் ஊழல் நடந்துள்ளது.

எதிர்கால நமது சந்ததிகளின் சொத்துக்கள் சூறையாடப்பட்டுள்ளது. காங்கிரசார்  ஆங்கிலேயர்களை விட 100 மடங்குக்கு  இந்த நாட்டில் ஊழல் செய்து சுரண்டியுள்ளனர் என சஞ்சய்காந்தியின் மனைவி மேனகா காந்தி பேசினார்.