Home இந்தியா மேனகா காந்தியும் ஜெயலலிதாவிற்கு வாழ்த்துக் கடிதம்!

மேனகா காந்தியும் ஜெயலலிதாவிற்கு வாழ்த்துக் கடிதம்!

776
0
SHARE
Ad

maanaka ganthiபுதுடெல்லி, அக்டோபர் 21 – ‘இடர்பாடுகளையெல்லாம் மன தைரியத்துடன் எதிர்கண்டு வெற்றி பெற்றீர்கள். மீண்டும் நீங்கள் முதல்வராவது உறுதி’ என்று மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் நல மேம்பாட்டு துறை அமைச்சர் மேனகா காந்தி ஜெயலலிதாவுக்கு ஒரு கடிதம் எழுதியிருந்தார்.

ஜெயலலிதாவுக்கு எழுதியுள்ள கடிதத்தில், “சமீப காலமாக நடந்தவை அனைத்தும் வருத்தத்துக்கு உரியது. உங்களுக்கு எனது ஆதரவு எப்போதும் உண்டு”.

“எல்லா பிரச்சனைகளும் இடர்பாடுகளும் விரைவில் முடிவுக்கு வந்து, மீண்டும் முறைப்படி நிர்வாகத்தில் ஈடுபடுவீர்கள்” என்று ஜெயலலிதாவுக்கு மேனகா காந்தி நம்பிக்கையூட்டியுள்ளார்”.