Home இந்தியா மேனகா காந்தி, ரஜினிகாந்துக்கு ஜெயலலிதா நன்றி கடிதம்

மேனகா காந்தி, ரஜினிகாந்துக்கு ஜெயலலிதா நன்றி கடிதம்

593
0
SHARE
Ad

jeyalalithaசென்னை, அக்டோபர் 21 – மத்திய அமைச்சர் மேனகா காந்திக்கும், நடிகர் ரஜினிகாந்துக்கும் நன்றி தெரிவித்து ஜெயலலிதா கடிதம் அனுப்பியுள்ளார்.

‘இடர்பாடுகளையெல்லாம் மன தைரியத்துடன் எதிர்கண்டு வெற்றி பெற்றீர்கள். மீண்டும் நீங்கள் முதல்வராவது உறுதி’ என்று மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் நல மேம்பாட்டு துறை அமைச்சர் மேனகா காந்தி ஜெயலலிதாவுக்கு ஒரு கடிதம் எழுதியிருந்தார்.

இதேபோல, நல்ல உடல் நலமும் அமைதியும் பெற வாழ்த்துவதாக நடிகர் ரஜினிகாந்தும் கடிதம் எழுதியிருந்தார். நடிகர் ரஜினிகாந்துக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் ஜெயலலிதா கூறியிருப்பதாவது:–

#TamilSchoolmychoice

‘2014, அக்டோபர் 19ந் தேதியிட்ட தங்களின் கடிதம் கிடைத்தது. மகிழ்ச்சி அடைந்தேன். அதில் நீங்கள் வெளியிட்டிருக்கும் உணர்வுபூர்வமான கருத்துக்களுக்கு நன்றி சொல்லிக்கொள்கிறேன்.”

“உங்களது ஒவ்வொரு முயற்சியும் வெற்றி பெறவும், நீங்கள் நீண்ட ஆயுளோடும் தேக ஆரோக்கியத்தோடும் வாழ ஆண்டவனைப் பிரார்த்திக்கிறேன். உங்கள் குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள்” என அந்தக் கடிதத்தில் ஜெயலலிதா கூறியுள்ளார்.

மேனகா காந்திக்கு நன்றி தெரிவித்து ஜெயலலிதா எழுதியிருக்கும் கடிதத்தில் கூறியிருப்பதாவது:– ‘அன்புள்ள மேனகாஜீ, 2014, அக்டோபர் 7-ந் தேதி எனக்கு நீங்கள் எழுதிய கடிதம் என்னை மிகவும் நெகிழ வைத்து விட்டது.”

“பணிச்சுமை அதிகம் இருந்து கொண்டிருக்கும் நிலையிலும் என்னைப் பற்றி நினைத்து அதற்காக அவகாசத்தை ஒதுக்கி எனக்கு கடிதம் எழுதி இருப்பது என்னை மிகவும் நெகிழ வைத்துள்ளது.”

“அந்தக் கடிதத்தில் நீங்கள் வெளியிட்டு இருக்கும் கருத்துக்களுக்காக நன்றி சொல்கிறேன். மேலும் நீங்களும் உங்கள் குடும்பத்தினரும் நல்ல தேக ஆரோக்கியத்துடன் இருக்க ஆண்டவனைப் பிரார்த்திக்கிறேன்” என அந்தக் கடிதத்தில் கூறியுள்ளார்.