Home வாழ் நலம் நெய் உடல் ஆரோக்கியத்துக்கு நல்லது!

நெய் உடல் ஆரோக்கியத்துக்கு நல்லது!

606
0
SHARE
Ad

BF-A-121_Hero_grande (1)மார்ச் 23 – நோயில்லாதவர்கள் தினமும் உணவில் சுத்தமான நெய் சேர்த்தால், உடல் ஆரோக்கியத்துக்கு நல்லது என்று ஆய்வில் தெரிய வந்துள்ளது.  அதிகமாக நெய் சாப்பிட்டால் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் என்று பொதுவாக சொல்வார்கள்.

ஆனால், நோயில்லாதவர்கள் தினமும் உணவில் சுத்தமான நெய் சேர்த்தால், உடல் ஆரோக்கியத்துக்கு நல்லது என்று ஆய்வில் தெரிய வந்துள்ளது.

இருதய நோய் பாதிப்பு உள்ளவர்களும், உடல் பருமனாக உள்ளவர்களும் நெய் சேர்ப்பது நல்லதல்ல. கொழுப்பை அதிகரித்து அவர்களுக்கு தீங்கு விளைவிக்கும். அவர்கள் நெய்யை உணவில் சேர்க்காமல் ஒதுக்கி விட வேண்டும்.

#TamilSchoolmychoice

அதே சமயம், நோய் பாதிப்பு எதுவும் இல்லாதவர்கள் என்றால், அவர்கள் எந்த பயமும் இல்லாமல் தினமும் சுத்தமான நெய்யை உணவில் சேர்த்து கொள்ளலாம்.

தினமும் உணவில் நெய் சேர்ப்பதால் ஏற்படும் பலன்கள் குறித்து அமெரிக்க பல்கலைக்கழகம் ஒன்று ஆய்வு செய்து அறிக்கை வெளியிட்டது.

அதன் விவரம் வருமாறு:

1. தினமும் நெய் சேர்ப்பது உடல் நலம் மற்றும் மன நலனுக்கு உகந்தது. இதனால், உடல் ஆரோக்கியம் பாதுகாக்கப்படும்.neyyiimagecopyrighted1

2. உடலில் உள்ள கெட்டச் சத்துக்களை வெளியேற்றவும், கண் பார்வையை அதிகரிக்கவும், தசைகளை வலுப்படுத்தவும் நெய் உதவுகிறது.

3 .வெண்ணெய்யை விட உருக்கப்பட்ட சுத்தமான நெய்யில் கொழுப்பு குறைவாக உள்ளதால், வேகமாக செரிக்கும்.

4. நெய்யை பிரிட்ஜில் வைக்க வேண்டியதில்லை. அதை கைபடாமல் வெளியில் வைத்திருந்தாலே நீண்ட காலத்துக்கு கெடாது. அதனால், நெய்யில் மாற்றம் ஏற்படாது.

5. நெய் சாப்பிடுவது மூளையின் செயல்பாட்டை ஊக்குவிக்கும். செரிமானத்தை ஊக்குவிப்பதால் நாம் எடுத்து கொள்ளும் உணவில் எடை குறையாமல் சமநிலையில் வைக்க உதவும்.

6. விட்டமின் ஏ, டி, இ, கே ஆகியவை நெய்யில் உள்ளதால் உடலில் ரத்தத்ததை சுத்தப்படுத்தி ரத்த சுழற்சியை மேம்படுத்தும்.

7 .உடல் செயல்பாட்டுக்கு சில கொழுப்பு சத்துகள் தேவை. அதை நெய் சாப்பிடுவதால் பெறலாம். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.