Home இந்தியா இன்று யுகாதி பண்டிகை – தலைவர்கள் வாழ்த்து!

இன்று யுகாதி பண்டிகை – தலைவர்கள் வாழ்த்து!

689
0
SHARE
Ad

Tamil-Daily-News_11949884892சென்னை,  மார்ச் 31 – இன்று தெலுங்கு யுகாதி பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு ஆளுநர், முதல்வர் ஜெயலலிதா, திமுக தலைவர் கருணாநிதி மற்றும் அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

ஆளுநர் ரோசய்யா, யுகாதி திருநாளில், தமிழ்நாடு, ஆந்திரா மற்றும் உலகெங்கும்  வாழும் தெலுங்கு மொழி பேசும் மக்களுக்கு என் மனமார்ந்த நல்வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன். இந்த நன்னாளில் மக்களிடையே சமாதானமும், சமத்துவமும், ஒற்றுமையும் ஏற்பட வாழ்த்துகிறேன்.

முதல்வர் ஜெயலலிதா, யுகாதி திருநாளை உவகையுடன் கொண்டாடி மகிழும் தெலுங்கு மற்றும் கன்னட மொழி பேசும் மக்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த யுகாதி நல்வாழ்த்துக்களை தெரிவித்து கொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன்.

#TamilSchoolmychoice

தமிழ் மக்களோடு ஒன்றி, உறவாடி,  உவகையுற வாழ்ந்து வரும் தெலுங்கு மற்றும் கன்னட மொழி பேசும் மக்கள் அனைவரும் இந்த புத்தாண்டில் மேற்கொள்ளும் புதிய முயற் சிகளில் எல்லாம் வெற்றியே பெற்று சீரோடும், சிறப்போடும் வாழ்ந்திட வேண்டும் என்று வாழ்த்துகிறேன்.

திமுக தலைவர் கருணாநிதி, திராவிட மொழிகள் குடும்பத்தில் தமிழ் மொழியோடு நெருங்கிய தொடர்புடைய தெலுங்கு மொழி பேசும் மக் கள் யுகாதி திருநாளை மிக சிறப்போடு கொண்டாடுவதை அறிந்து மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.

திமுக ஆட்சி காலத்தில் தெலுங்கு மொழி  பேசும் மக்களின் சமூக, பண்பாட்டு உணர்வுகளை மதிக்கும் நோக்கத்துடன் தெலுங்கு புத்தாண்டு பிறக்கும் யுகாதி திருநாளுக்கு அரசு விடுமுறை வழங்கி பெருமைப்படுத்தியது. தெலுங்கு மக்கள் அனைவர் வாழ்விலும் வளமும் நலமும் நிறைய, வலிவும் பொலிவும் சேர எனது  வாழ்த்துகள்.

தமிழக காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகன், இந்த புத்தாண்டு நாடெங்கிலும் ஒரு எழுச்சியையும், மலர்ச்சியையும் உண்டாக்கி நாடு நலம்  பெறத்தக்க வகையில் நன்மை பயக்க வேண்டும் என்று தெலுங்கு பேசும் மக்களை வாழ்த்துகிறேன்.

தேமுதிக தலைவர் விஜயகாந்த், புத்தாண்டு என்பது புதிய துவக்கத்துக்கு வழி வகுக்கிறது. இந்த புத்தாண்டில் மக்கள் எல்லா வளங்களும்,  நலன்களும் பெற்று சீரும், சிறப்புமாக வாழ இறைவனை வேண்டி தேமுதிக சார்பில் வாழ்த்துக்கள்.

பாமக நிறுவனர் ராமதாஸ், தமிழர்களுக்கும், தெலுங்கு மற்றும் கன்னட மொழி பேசும் மக்களுக்கும் இடையிலான ஒற்றுமையும், சகோதரத் துவமும் ஆல் போல் தழைத்தோங்க இந்த நன்னாளில் நாம் அனைவரும் உறுதியேற்க வேண்டும் என ராமதாஸ் கூறினார்.

சமக தலைவர் சரத்குமார்: இன்று தொடங் கும் புத்தாண்டில் அனைவரது உள்ளங்களிலும், இல்லங்களிலும் மகிழ்ச்சி பொங்கிட வேண்டும்  என்று எனது சக தெலுங்கு மற்றும் கன்னட சகோதர, சகோதரிகளுக்கு இனிய யுகாதி நல்வாழ்த்துகள்.