Home வணிகம்/தொழில் நுட்பம் சீனாவில் கட்டுமானம், ரியல் எஸ்டேட் தொழில்களுக்கு புதிய நிபந்தனைகள்!

சீனாவில் கட்டுமானம், ரியல் எஸ்டேட் தொழில்களுக்கு புதிய நிபந்தனைகள்!

574
0
SHARE
Ad

china-real-estateமார்ச் 31 – சீனாவில் கட்டுமானம் மற்றும் ரியல் எஸ்டேட் தொழில்களில் பெருகி வரும் ஊழல்களைத் தடுப்பதற்காக, பெய்ஜிங்கில் பல புதிய விதிகளை நடைமுறைப்படுத்த அந்நாட்டு அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.

இந்த விதிகள் குறித்து அதிகாரப் பூர்வமாக தகவல்களை வெளியிட்டுள்ள செய்தி நிறுவனமான சின்ஹுவா தெரிவித்துள்ளதாவது :-

“சீனாவில் கடந்த 12 மாதங்களில் வீட்டு மனைகள் மற்றும் நிலங்களின் விலைகள் மிகவும் உயர்ந்துள்ளது. இதன் அடிப்படை காரணமாக இருப்பது ஊழல் என சீன அரசு கண்டறிந்துள்ளது. இதனால் ஊழலைத் தடுக்கும் நோக்கத்துடன் வெளிவந்துள்ள இந்த விதிகள்,  ரியல் எஸ்டேட் துறைகளான பொது வீடுகளை வாங்குதல், விற்றல், பயன்பாடு, ஒதுக்கீடு, மானியம், நிர்வாக மேற்பார்வை போன்ற அனைத்து விஷயங்களுக்கும் பொதுவானதாகும்” என தெரிவித்துள்ளது.

#TamilSchoolmychoice

மேலும் இந்த புதிய விதிகளின்படி பொது வீடுகளை சட்டவிரோதமாக பயன்படுத்துவோர், குறிப்பாக அரசு அதிகாரங்களில் இருந்து கொண்டு லஞ்சம் மற்றும் அதிகார துஷ்பிரயோகம் செய்வோர் மீது கடும் நடவடிக்கைகளும், அபராதமும் விதிக்கப்படும் என தெரியவத்துள்ளது.

சீன அரசு நிலங்களின் விலைகளைக் குறைக்கவும், ஒன்றுக்கு மேற்பட்ட வீடுகளை வாங்குவதைக் கட்டுப்படுத்தவும் அரசாங்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளது.

சீனாவின் பொது பாதுகாப்பு அமைச்சர் ஜுவா யோங்காங் மற்றும் அவரது குடும்பத்தினர் செய்த ஊழல்களே, இந்த அவசர விதிகளுக்குக்கான காரணம் என கருதப்படுகின்றது. தற்போது அவர்களிடமிருந்து சுமார் 14.5 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான சொத்துக்களை அரசு பறிமுதல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.