Home கலை உலகம் தமிழகம் முழுவதும் இனம் படம் திடீர் நிறுத்தம்!

தமிழகம் முழுவதும் இனம் படம் திடீர் நிறுத்தம்!

862
0
SHARE
Ad

727471af-846f-4658-8239-5e676d22776111சென்னை, ஏப்ரல் 1 – தமிழகம் முழுவதும் இனம் படம் திரையிடுவது நிறுத்தப்பட்டுள்ளது. சந்தோஷ் சிவன் இயக்கியுள்ள இனம், இலங்கையில் நடந்த போரின் பின்னணியில் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த படம் ஈழத் தமிழர்களுக்கு எதிராகவும், சிங்களர்களுக்கு ஆதரவாகவும் இருப்பதாக கூறி தமிழ் அமைப்பினர் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். இதையடுத்து படத்திலிருந்து 5 காட்சிகள் நீக்கப்பட்டன.

இருந்தாலும் படத்தை தடை செய்ய வேண்டும் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ உள்பட தமிழ் அமைப்புகள் படத்துக்கு தடை கோரின. இதையடுத்து இன்று முதல் தமிழகம் முழுவதும் இந்த படத்துக்கு தயாரிப்பு நிறுவனமே தடை விதித்துள்ளது.

#TamilSchoolmychoice

இது குறித்து இந்த படத்தை வெளியிட்டுள்ள இயக்குநரும் , தயாரிப்பாளருமான லிங்குசாமி கூறிய அறிக்கையில், உலக தமிழர்களின் உண்மையான போராட்டங்களில் என்னை இணைத்துக்கொள்வதை கடமையாக வைத்திருக்கிறேன்.

தமிழ் மண் மீது எனக்குள்ள அன்பை கேள்விக்குறியாக்குவது  போன்ற வதந்திகளை சிலர் பரப்புகின்றனர். சினிமா நேசனாகவே இனம் படத்தை வாங்கி வெளியிட்டேன். ஆனால் அந்த படத்தை பற்றி தவறான தகவல்கள் பரப்பப்பட்டிருக்கிறது.

அதனால் அரசியல் ரீதியான குழப்பங்களும் விளைவிக்கப்படுகின்றன. எனவே தேர்தல் நேரத்தில் எந்த குழப்பங்களும் வராமல் இருக்க இனம் படம் இன்று முதல் எல்லா திரையறங்குகளில் இருந்தும் திறும்பப்பெறப்படும் என லிங்குசாமி கூறியுள்ளார்.