Home அவசியம் படிக்க வேண்டியவை ‘செல்லினம்’ – இன்று முதல் நோக்கியா எக்ஸ்X திறன் பேசிகளில் பதிவிறக்கம் செய்யலாம்!

‘செல்லினம்’ – இன்று முதல் நோக்கியா எக்ஸ்X திறன் பேசிகளில் பதிவிறக்கம் செய்யலாம்!

877
0
SHARE
Ad

sellinam-promo-1024x500ஏப்ரல் 1 – அண்மையில் அறிமுகமாகி, குறுகிய காலத்திலேயே – மலிவான விலை, நிறைவான தொழில் நுட்பங்கள் போன்ற அம்சங்களால் உலகையே ஒரு கலக்கு கலக்கி வரும் நோக்கியா எக்ஸ் (Nokia X) திறன்பேசிகளில் இன்று முதல் செல்லினம் செயலியை பயனர்கள் பதிவிறக்கம் செய்து பயன்படுத்தலாம்.

ஒரு காலத்தில் கைத்தொலைபேசி உலகில் கொடி கட்டிப் பறந்த நிறுவனம் நோக்கியா. கைத்தொலைபேசி என்றால் அது நோக்கியா தான் என்று மக்கள் பிரித்துப் பார்க்க முடியாத அளவிற்கு பிரபலமாகிவிட்ட நோக்கியா, பின்னர் ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன்கள் மற்றும் சாம்சுங் நிறுவனத்தின் திறன்பேசிகளின்  வருகையால் வணிகத் துறையில் பின்னடைவுகளைச் சந்தித்தது.

தனது கைத்தொலைபேசிகளில் கூகுளின் அண்ட்ரோய்ட், ஆப்பிள் நிறுவனத்தின் ஐஓஎஸ் தொழில் நுட்பங்களுக்கு இணையாக, மைக்ரோசோஃப்ட் நிறுவனத்துடன் இணைந்து விண்டோஸ்-போன் தொழில் நுட்பத்தைக் கொண்ட கருவிகளை ‘லுமியா’ எனும் பெயரில் நோக்கியா அறிமுகப்படுத்தியது. இருப்பினும் இந்த அறிமுகம் நோக்கியாவின் லுமினியா கருவிகளுக்கு எதிர்பார்த்த வரவேற்பைத் தரவில்லை.

#TamilSchoolmychoice

இந்நிலையில், நோக்கியா தனது குறைந்த விலை திறன்பேசிகளில் அண்ட்ரோய்ட் தொழில் நுட்ப இயங்குதளத்தைப் பயன்படுத்தத் தொடங்கியுள்ளது. முதல் கட்டமாக, நோக்கியா எக்ஸ் வகைத் திறன் பேசிகளை அந்நிறுவனம் சீனா, இந்தியா மற்றும் தென்கிழக்காசிய நாடுகளுக்கு அறிமுகப்படுத்தியுள்ளது.

அறிமுகப்படுத்தப்பட்ட குறுகிய காலத்திலேயே சீனாவில் நோக்கியா எக்ஸ் ரக திறன் பேசிகள் விற்றுத் தீர்ந்து விட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவிலும் இதன் விற்பனை புரட்சிகளை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

செல்லினம் இனி நோக்கியா எக்ஸ் திறன்பேசிகளில்….

இந்நிலையில், தமிழ் இணைய உலகில் புரட்சிகரமான அறிமுகம் என்ற பாராட்டுகளைப் பெற்ற செல்லினம் செயலி தற்போது நோக்கியா எக்ஸ் அண்ட்ரோய்ட் தொழில்  நுட்பத்திற்கு ஏற்ப வடிவமைக்கப்பட்டுள்ளது.

இன்று முதல், நோக்கியா எக்ஸ் திறன்பேசிகள் வைத்திருப்பவர்கள் இந்தச் செயலியை ‘நோக்கியா ஸ்டோரிலேயே’  பதிவிறக்கம் செய்து கொண்டு பயன் பெறலாம்.

மாறிவரும் தொழில் நுட்பங்களுக்கேற்ப உடனுக்குடன் தொழில் நுட்ப வடிவத்திலும், உள்ளடக்கத்திலும் மாற்றங்கள் செய்து வரும் செல்லினம் செயலி நோக்கியா எக்ஸ் திறன் பேசிகளிலும் தற்போது இடம் பெற்றுள்ளதால் மேலும் பரவலான வகையில் திறன் பேசிகளில் தமிழைப் பயன்படுத்துபவர்கள் பயனடைய முடியும்.

செல்லினம் செயலி, திறன்பேசிகளிலும், தட்டைக் கருவிகளிலும் தமிழிலேயே தகவல் சேகரிப்பதற்கும் செய்தி பரிமாற்றங்களை நிகழ்த்துவதற்கும் துணை புரிகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

செல்லினம் செயலி தற்போது ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட பயனர்களைக் கொண்டு வெற்றி நடைபோட்டு வருகின்றது.