Home கலை உலகம் கமல்ஹாசனால் இணைந்த நடிகைகள்!

கமல்ஹாசனால் இணைந்த நடிகைகள்!

796
0
SHARE
Ad

images (1)சென்னை, ஏப்ரல் 1 – என்னைவிட ஆண்ட்ரியா ரொம்பவே வேகமானவர் என்றார் பார்வதி. மரியான், பூ, சென்னையில் ஒரு நாள் என தேர்வு செய்தே படங்களை ஒப்புக்கொள்பவர் பார்வதி.

அடுத்து கமலின் உத்தமவில்லன் படத்தில் நடிக்கிறார். இதேபடத்தில் ஆண்ட்ரியாவும் நடிக்கிறார். பார்வதி ரொம்பவே சாது. ஆண்ட்ரியா அதிரடியானவர்.

எதிரெதிர் துருவத்துக்கு ஈர்ப்பு அதிகம் என்பதுபோல் ஆண்ட்ரியாவுக்கும், பார்வதிக்கும் நட்பு ரொம்பவே ஒத்துப்போகிறதாம். இருவரும் படப்பிடிப்பில் இருக்கும்போது, அமைதியாக உட்கார்ந்திருக்கும் பார்வதியை அரட்டையடித்தே புலம்ப வைத்துவிடுகிறாராம் ஆண்ட்ரியா.

#TamilSchoolmychoice

சமீபத்தில் இருவரும் பேசிக்கொண்டிருந்த காட்சியை புகைப்படம் எடுத்துக்கொண்டிருந்தபோது திடீரென்று பார்வதியின் கழுத்தில் கையை போட்டு இறுக்கியபடி போஸ் கொடுத்தார் ஆண்ட்ரியா.

ஆண்ட்ரியாவை பற்றி பார்வதி கூறும்போது, ஆண்ட்ரியா ரொம்பவே நல்லவர். எங்கள் குழுவில் அவர் ரொம்பவே வேகமானவர்.
ஆண்ட்ரியாவிடமிருந்து நிறைய விஷயங்களை கற்க வேண்டும்.

அவரது சுறுசுறுப்பு என்னையும் கொஞ்சம் தொற்றிக்கொள்ளும் என நம்புகிறேன். எங்களுக்குள் ஏற்பட்ட நட்பை கண்டு பலர் வியக்கிறார்கள். இதற்காக கமலுக்குதான் நன்றி சொல்ல வேண்டும். எங்களை ஒரே படத்தில் அவர் நடிக்க வைத்ததால்தான் இந்த நட்பு சாத்தியமானது  என்றார்.