Home இந்தியா “வெட்கப்படுகிறேன்” – தேசிய விருது வென்ற பார்வதி மேனன் கருத்து!

“வெட்கப்படுகிறேன்” – தேசிய விருது வென்ற பார்வதி மேனன் கருத்து!

1115
0
SHARE
Ad

சென்னை – ‘டேக் ஆஃப்’ என்ற மலையாளப் படத்தில் சிறப்பான நடிப்பை வழங்கியதற்காக கடந்த வாரம் தேசிய விருது வென்ற நடிகை பார்வதி மேனனால், அதனை மகிழ்ச்சியோடு கொண்டாட முடியவில்லை.

காஷ்மீரில் ஆலயம் ஒன்றில் 8 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கிடைக்க வேண்டுமென்றும், ஒரு ஹிஸ்துஸ்தானியாகப் பிறந்து, அதற்காக வெட்கப்படுகின்றேன் என்றும் பார்வதி மேனன் தனது டுவிட்டரில் தெரிவித்திருக்கிறார்.

காஷ்மீரில் கத்துவா என்ற கிராமத்தை சேர்ந்த 8 வயது சிறுமி ஆசிஃபா, 7 பேரால் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்ட சம்பவம் ஒட்டுமொத்த இந்தியாவையும் உலுக்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.