கோம்பாக் – பத்துமலை அருகே உள்ள மலை ஒன்றில், நேற்று ஞாயிற்றுக்கிழமை தங்களது அரசியல் கட்சியைக் கொடியை நடச் சென்ற குழு ஒன்று, திரும்பி வர பாதை தெரியாமல் அங்கு சிக்கிக் கொண்டது.
இந்நிலையில், அவர்களில் ஒருவரின் செல்பேசியில் இருந்து தீயணைப்பு வீரர்களுக்குத் தகவல் சென்றதையடுத்து, செலாயாங், கோம்பாங், ஸ்ரீசெர்டாங், கெப்போங் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த தீயணைப்பு வீரர்களும், தன்னார்வலர்களும் அவர்களைத் தேடிச் சென்று பாதுகாப்பாக மீட்டு வந்திருக்கின்றனர்.
நேற்று காலை 9.30 மணிக்குச் சென்ற அவர்கள், அங்கு நேற்று முழுவதும் சிக்கிக் கொண்டனர்.
இந்நிலையில், அவர்களை இன்று திங்கட்கிழமை அதிகாலை 12.30 மணியளவில்,15 மணி நேரத்திற்குப் பிறகு தான் தீயணைப்பு வீரர்கள் அவர்களை மீட்டிருக்கின்றனர்.
இச்சம்பவத்தில் யாருக்கும் எந்தவித காயமும் இல்லையென தீயணைப்பு வீரர்கள் தெரிவித்திருக்கின்றனர்.
படம்: போர்னியோ பேஸ்புக்