Home நாடு தேர்தல் 14: உங்கள் வாக்களிப்பு மையம் எங்கே? – தேர்தல் ஆணைய இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம்!

தேர்தல் 14: உங்கள் வாக்களிப்பு மையம் எங்கே? – தேர்தல் ஆணைய இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம்!

1158
0
SHARE
Ad

கோலாலம்பூர் – மே 9-ம் தேதி நடைபெறவிருக்கும் 14-வது பொதுத்தேர்தலில், பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள், தங்களின் வாக்களிப்பு மையங்கள் பற்றிய தகவலை, தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ இணையத்தின் மூலமாகத் தெரிந்து கொள்ளலாம்.

pengundi.spr.gov.my  என்ற இணையதளத்திற்குச் சென்று வாக்காளர்கள், தங்களின் அடையாள அட்டை எண்ணை தட்டச்சு செய்தால், வாக்களிக்கும் தொகுதி, வாக்களிப்பு மையம் முதலான தகவல்களைப் பெற முடியும்.

மேலும், கூகுள் பிளேஸ்டோர் அல்லது ஆப்பிள் ஸ்டோர் ஆகியவற்றில் இருந்து MySPR Semak என்ற செயலியைப் பதிவிறக்கம் செய்வதன் மூலமும் அத்தகவல்களைப் பெற முடியும்.

#TamilSchoolmychoice

மேலும், அதே செயலியில் வேட்பாளர்களின் பெயர்களையும், முடிவுகளையும் அறிந்து கொள்ள முடியும்.

அதேவேளையில், 03-8892 7018 என்ற தேர்தல் ஆணயத்தின் எண்ணிற்கு அழைத்தோ அல்லது 15888 என்ற எண்ணிற்கு “SPR <space> IC number.” என தட்டச்சு செய்து அதில் அடையாள அட்டை எண்ணைக் குறிப்பிட்டு, குறுஞ்செய்தி அனுப்பியும் மேற்ச்சொன்ன தகவல்களைப் பெற முடியும்.