Home நாடு ஜெர்லுன் நாடாளுமன்றம், ஜித்ரா சட்டமன்றம் இரண்டிலுமே போட்டியிடுகிறார் முக்ரிஸ்!

ஜெர்லுன் நாடாளுமன்றம், ஜித்ரா சட்டமன்றம் இரண்டிலுமே போட்டியிடுகிறார் முக்ரிஸ்!

902
0
SHARE
Ad

லங்காவி – 14-வது பொதுத்தேர்தலில், ஜெர்லுன் நாடாளுமன்றம், ஜித்ரா சட்டமன்றம் என இரண்டிலுமே முக்ரிஸ் மகாதீர் போட்டியிடுவார் என பக்காத்தான் ஹராப்பான் தலைவர் துன் டாக்டர் மகாதீர் முகமது நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு பாடாங் மாட்சிராட்டில் நடைபெற்ற கூட்டத்தில் அறிவித்தார்.

இது குறித்து முக்ரிஸ் கூறுகையில், “நான் நாடாளுமன்றத்தில் போட்டியிட்டாலும், சட்டமன்ற ஆட்சி நிர்வாகத்தில் நான் நிறைய பங்களிப்பாற்றிக் கொண்டிருக்கிறேன்.

“எனவே, பக்காத்தான் ஹராப்பான் தலைவர் டாக்டர் மகாதீர் முகமது மற்றும் பெர்சாத்து தலைவர் மொகிதின் யாசின் ஆகியோரிடம் கலந்தாலோசித்த பின்னர், இரண்டு தொகுதிகளிலும் போட்டியிடுவது என முடிவெடுத்தேன்” என்று முக்ரிஸ் தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

13-வது பொதுத்தேர்தலில் அம்னோ சார்பில் போட்டியிட்டு தான் வெற்றி பெற்ற ஆயர் ஹீத்தாம் தொகுதியில் ஏன் போட்டியிடவில்லை? என்ற கேள்விக்குப் பதிலளித்த முக்ரிஸ், பக்காத்தான் எந்தத் தொகுதியில் வெற்றி பெறவில்லையோ அங்கு போட்டியிட்டு வெற்றி பெறவே தான் விரும்புவதாகத் தெரிவித்தார்.