Home நாடு தேர்தல் 14: பண்டார் துன் ரசாக்கில் போட்டியிட ஷாரிசாட் மறுப்பு!

தேர்தல் 14: பண்டார் துன் ரசாக்கில் போட்டியிட ஷாரிசாட் மறுப்பு!

1080
0
SHARE
Ad

கோலாலம்பூர் – 14-வது பொதுத்தேர்தலில் பண்டார் துன் ரசாக் தொகுதியில், அம்னோ மகளிர் பிரிவுத் தலைவர் ஷாரிசாட் அப்துல் ஜாலில் போட்டியிடப்போவதாக என வெளிவந்த தகவலை அவர் மறுத்திருக்கிறார்.

“பண்டார் துன் ரசாக்கில் போட்டியிட வந்த வாய்ப்பை நான் ஏற்றுக் கொள்வேனா? என்று நிறைய பேர் என்னிடம் கேட்கிறார்கள்.

“ஆனால் என்னுடைய பதில் இல்லை என்பதே. என்றாலும், பண்டார் துன் ரசாக் தொகுதியில் தேசிய முன்னணி, பிகேஆரை வீழ்த்த முடியும்” என்று ஷாரிசாட் இன்று திங்கட்கிழமை தனது டுவிட்டரில் தெரிவித்திருக்கிறார்.