Home நாடு தேர்தல் 14: பெர்மாத்தாங் பாவில் வான் அசிசாவை எதிர்த்து அஃப்னான் போட்டி!

தேர்தல் 14: பெர்மாத்தாங் பாவில் வான் அசிசாவை எதிர்த்து அஃப்னான் போட்டி!

987
0
SHARE
Ad

கப்பளா பத்தாஸ் – 14-வது பொதுத்தேர்தலில் பெர்மாத்தாங் பாவ் நாடாளுமன்ற தொகுதியில், பிகேஆர் தலைவர் டாக்டர் வான் அசிசா வான் இஸ்மாயிலை எதிர்த்து, பினாங்கு பாஸ் இளைஞர் பிரிவுத் தலைவர் அஃப்னான் ஹமீமி தாயிப் போட்டியிடுகிறார்.

இதனை, பாஸ் தலைவர் டத்தோஸ்ரீ அப்துல் ஹாடி அவாங், பொங்சு செரிபுவில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.

பாஸ் இளைஞர் பிரிவுத் தலைவரான அஃபனான், முன்னாள் பாலிங் நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ தாயிப் அசாமுடென் முகமது தாயிப்பின் மகனாவார்.

#TamilSchoolmychoice