Home One Line P2 இன்ஸ்டாகிராம் பதிவுகள் : “ஆண்ட்ரியாவின் அழகுக் காட்சிகள்

இன்ஸ்டாகிராம் பதிவுகள் : “ஆண்ட்ரியாவின் அழகுக் காட்சிகள்

754
0
SHARE
Ad

சென்னை : நடிக்க வந்து பல ஆண்டுகள் கடந்து விட்டாலும், இன்னும் இயக்குநர்களால் தேடப்படும் நடிகையாகத் திகழ்கிறார் ஆண்ட்ரியா. முழுப்பெயர் ஆண்ட்ரியா ஜெரமியா.

கட்டுக் குலையாத உடல்வாகு, பின்னணிப் பாடல்களைப் பாடும் அளவுக்கான இனிமையான குரல்வளம், இளமையும் அழகும் இணைந்த தோற்றம், எந்தவிதக் கதாபாத்திரமானாலும், அதைத் தயங்காமல் ஏற்று நடிக்கும் ஆற்றல் – கவர்ச்சியைக் காட்டுவதிலும் தாராளம் – இப்படியாக ஒரு சினிமா நடிகைக்கான அத்தனை இலக்கணங்களோடும் வலம் வருவது ஆண்ட்ரியாவின் பலம்.

இவரது நடிப்பில் அடுத்து வெளிவரக் காத்திருக்கும் படம் விஜய் கதாநாயகனாக நடிக்கும் “மாஸ்டர்”. எதிர்வரும் ஜனவரி 13-இல் உலகம் எங்கும் திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது மாஸ்டர்.

#TamilSchoolmychoice

சமூக ஊடகங்களிலும் தீவிரமாக இயங்குபவர் ஆண்ட்ரியா. தொடர்ச்சியாக அவரது புகைப்படங்களும் காணொலிக் காட்சிகளும், இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் அவரது மற்ற சமூக ஊடகங்களிலும் தொடர்ந்து பதிவேற்றம் காண்கின்றன.

இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மட்டும் அவரை சுமார் 2 மில்லியன் இரசிகர்கள் பின்தொடர்கின்றனர்.

ஆண்ட்ரியா அண்மையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்ட புகைப்படங்கள் சிலவற்றை இங்கே காணலாம்: