Home One Line P1 மாஸ்டர் ஜனவரி 13-இல் வெளியீடு- மலேசியாவில் வெளிவருமா?

மாஸ்டர் ஜனவரி 13-இல் வெளியீடு- மலேசியாவில் வெளிவருமா?

854
0
SHARE
Ad

சென்னை: இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய், விஜய் சேதுபதி, முக்கிய வேடத்தில் நடித்து வெளிவர இருக்கும் திரைப்படம் ‘மாஸ்டர்’. இப்படம் 2020-ஆம் ஆண்டு வெளியாவதாக இருந்தது. ஆனால், கொவிட்-19 தொற்றுக் காரணமாக அது இவ்வாண்டுக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

இப்படத்தை அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வெளியிட பேச்சுவார்த்தை நடத்தப்படுவதாகவும், படம் ஜனவரி மாதம் 13-ஆம் தேதி வெளியாகும் என்று அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்துள்ளார்.

இந்த விஷயம் விஜய் இரசிகர்களை மேலும் மகிழ்ச்சி அடைய வைத்துள்ளது. ஆனால், இது தமிழ்நாட்டிலுள்ள நிலைமை.

#TamilSchoolmychoice

மலேசியாவில் அதே தேதியில் திரைப்படம் வெளியாகுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. தற்போது மலேசிய மாநிலங்களில் முக்கிய இடங்களில் நிபந்தனைக்குட்ட நடமாட்டக் கட்டுபாடுகள் ஏற்படுத்தப்பட்டுள்ள நிலையில், திரையரங்குகள் மூடப்பட்டுள்ளன். ஒரு வேளை இந்த கட்டுப்பாடு நீடித்தால், மலேசியாவில் மாஸ்டர் திரைப்படம் வெளியாவது கேள்விக்குறியே.

முன்னதாக, இணையம் மூலமாக மாஸ்டர் படம் வெளிவரும் என்று கூறப்பட்டது. ஆனால், இரசிகர்கள் மற்றும் தயாரிப்பாளர்களின் வேண்டுகோளுக்கு ஏற்ப படம் இப்போது திரையரங்கில் வெளியாகிறது. மலேசியாவில் வெளியாகுமா இல்லையா என்பதை அவ்வப்போது நிலைமையை பொருத்தே கணிக்கப்படும்.