ஜோகூர் பாரு: பேராக்கில் நடந்தது ஜோகூரிலும் நடக்கக்கூடும் என்று பெர்சாத்து கெம்பாஸ் சட்டமன்ற உறுப்பினர், ஒஸ்மான் சாபியன் சூசகமாகக் கூறியுள்ளார்.
பெர்சாத்து துணைத் தலைவர் அகமட் பைசால் அசுமு நேற்று பேராக் மந்திரி பெசார் பதவியில் இருந்து நீக்கப்பட்ட பின்னர் அவர் இவ்வாறு கூறினார்.
ஜோகூர் பெர்சாத்து, அம்னோவைச் சேர்ந்த ஹஸ்னி முகமட்டை பழிவாங்கக்கூடும் என்று கூறினார்.
எட்டு மாதங்களாக மத்திய மற்றும் மாநில அரசாங்கங்களை உருவாக்கிய ஒரே கூட்டணியில் அம்னோவும் பெர்சாத்துவும் உறுப்பினர்களாக இருந்ததால் பைசால் வெளியேற்றப்பட்டபோது தான் அதிர்ச்சியடைந்ததாக ஒஸ்மான் கூறினார்.
“மேலும், அகமட் பைசால் பெர்சாத்து துணைத் தலைவராக உள்ளார். அது நிச்சயமாக கட்சி உறுப்பினர்களாகிய எங்கள் உணர்வுகளை தொட்டுள்ளது. மத்திய மற்றும் மாநில அரசாங்கங்களை அமைத்து எட்டு மாதங்களுக்கும் மேலாக நாங்கள் ஒன்றாக இருந்தபோது இந்த செய்தியைக் கேட்டதும் நானே மிகவும் அதிர்ச்சியடைந்தேன். இதை தீர்மானிக்க பெர்சாத்து தலைமைக்கு அதிக உரிமை உண்டு,” என்று ஒஸ்மான் கூறினார்.
“இருப்பினும், இந்த விஷயத்தில் நான் கருத்து தெரிவிக்க விரும்பவில்லை, ஏனெனில் நான் மாநிலத் தலைமையில் அல்ல. இது ஜோகூரில் நடக்கலாமா இல்லையா என்பதை நாம் முதலில் பார்ப்போம், ”என்று அவர் மேலும் கூறினார்.