கோலாலம்பூர்: லோ யாட் வாடிக்கையாளர் சண்டைகள் காரணமாக, கோலாலம்பூரில் உள்ள நேற்று நடந்த சண்டையில் ஈடுபட்ட 42 பேரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். வாடிக்கையாளரை பெறும் போட்டியில் இந்த சண்டை ஏற்பட்டதாக முன்னதாக காணொலி ஒன்று சமூக ஊடகங்களில் பரவலாகப் பகிரப்பட்டது.
நேற்று இரவு 7 மணியளவில் இந்த சம்பவம் குறித்து பொதுமக்களிடமிருந்து புகார் வந்ததாக டாங் வாங்கி மாவட்ட காவல் துறைத் தலைவர் ஏசிபி முகமட் சைனால் அப்துல்லா தெரிவித்தார்.
“இந்த சம்பவம் கணினிகள் மற்றும் மடிக்கணினிகளை விற்கும் கடையில் வாடிக்கையாளர்களிடையே ஏற்பட்ட சண்டையிலிருந்து உருவானது. தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைவரும் 20 முதல் 35 வயதுக்குட்பட்டவர்கள். மேலதிக விசாரணைகளுக்காக டாங் வாங்கி காவல் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டனர், ” என்று அவர் நேற்று ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.
இந்த சம்பவத்தில் இனப்பிரச்சனைகள் இல்லை என்று அவர் கூறினார்.