Home One Line P1 ‘ஒரு பாட்டில் குடித்து விட்டு, இரண்டு, மூன்று குடித்தது போல் பேசாதீர்கள்!’

‘ஒரு பாட்டில் குடித்து விட்டு, இரண்டு, மூன்று குடித்தது போல் பேசாதீர்கள்!’

746
0
SHARE
Ad

கோலாலம்பூர்: கெடாவில் கோயில் இடிப்பு குறித்து மஇகா, ஜசெக இன மற்றும் மத உணர்வுகளை தூண்டுவதாக கெடா மந்திரி பெசார் முகமட் சனுசி முகமட் நூர் கூறியுள்ளார். இதில் தனது பாஸ் கட்சிக்கு எந்த தொடர்பும் இல்லை என்று அவர் கூறினார்.

“ஒரு பாட்டில் மதுவை மட்டுமே உட்கொண்ட பிறகு, இரண்டு, மூன்று பாட்டில்களில் குடித்துவிட்டது போல பேச வேண்டாம். இனத்திற்கு மத்தியில் புகழைத் தேட வேண்டாம்,” என்று அவர் சாடியுள்ளார்.

மனிதவள அமைச்சர், மஇகா துணைத் தலைவர் டத்தோஸ்ரீ எம்.சரவணனும், ஜசெக பினாங்கு துணை முதலமைச்சர் பி.இராமசாமியின் கருத்துகளை அடுத்து சனுசி இந்த கருத்தினை பதிவு செய்துள்ளார்.

#TamilSchoolmychoice

“பாஸ் மற்ற மதங்களை பாகுபடுத்தும் ஒரு மத தீவிரவாதி என்ற கருத்தை உருவாக்க இந்த சம்பவம் திசை திருப்பப்பட்டது,” என்று அவர் கூறினார்.

சம்பந்தப்பட்ட கோயில் இரயில்வே நிலைய நிலத்தில் சட்டவிரோதமாக கட்டப்பட்டதாகவும், சில ஆண்டுகளுக்கு முன்பு மட்டுமே கட்டப்பட்டதாகவும், 100 ஆண்டுகளுக்கு முன்னர் கூறப்பட்டதாக இல்லை என்றும் சனுசி கூறினார்.

“மஇகா மற்றும் ஜசெகவைச் சேர்ந்த எந்த இந்தியத் தலைவர்களும், இந்த உண்மையை வெளிப்படுத்தத் துணியவில்லை. மாறாக, அவர்கள் சாம்பியன்களாக ஆவதற்கு இன மற்றும் மத உணர்வை விரும்புகிறார்கள்.”

கோலா கெடாவின் தாமான் பெர்சாத்து கோயில் விவகாரத்தை அவர்கள் ஏன் பெரிதாக்கினார்கள் என்று அவர் கேள்வி எழுப்பினார்.

“மஇகா, ஜசெக ஏன் சிலாத் பயிற்சி இடத்திற்கு எதிராக குரல் கொடுக்கவில்லை? மூத்த அரசியல்வாதிகள் ஒரு போட்டல் மட்டுமே உட்கொண்டு, இரண்டு மூன்று பாட்டில்கள் உட்கொண்டது போல குடிபோதையில் பேசக்கூடாது,” என்று அவர் கூறினார்.

அலோர் ஸ்டாரில் இடம் பெயர கோயிலுக்கு ஒரு சிறந்த இடம் வழங்கப்பட்டதாக சனுசி வலியுறுத்தினார். ஆனால், அதன் நிர்வாகம் அசல் தளத்திற்குத் திரும்ப முடிவுசெய்தது மற்றும் நடவடிக்கை எடுப்பதற்கு முன்பு பல வெளியேற்ற அறிவிப்புகள் வழங்கப்பட்டன என்ரு சனுசி கூறினார்.

“அரசியல்வாதிகள் சமாதானம் செய்பவர்களின் பங்களிப்பையும், நல்லிணக்கத்தையும் சட்டத்தின் ஆட்சியையும் பாதுகாக்க வேண்டும் என்று நான் தெளிவாகக் கூறியுள்ளேன். சட்டம் மற்றும் விதிகளை அமல்படுத்துவது மக்களை ஒட்டுமொத்தமாக பாதுகாப்பதே தவிர யாரையும் பாகுபாடு காட்டக்கூடாது,” என்று அவர் கூறினார்.