Home One Line P1 பேராக்: பைசால் அசுமு நீக்கப்பட்டது குறித்து பெர்சாத்து வருத்தம்

பேராக்: பைசால் அசுமு நீக்கப்பட்டது குறித்து பெர்சாத்து வருத்தம்

479
0
SHARE
Ad

கோலாலம்பூர்: தங்கள் சட்டமன்ற உறுப்பினரான அகமட் பைசால் அசுமுவை மந்திரி பெசாராக பதவி நீக்கம் செய்ததற்கு பெர்சாத்து வருத்தம் தெரிவித்துள்ளது.

பெர்சாத்து பொதுச் செயலாளர் ஹம்சா சைனுடின் நேற்றைய நம்பிக்கையில்லா தீர்மான வாக்கெடுப்பில் அகமட் பைசாலை ஆதரித்த சட்டமன்ற உறுப்பினர்களுக்கு நன்றி தெரிவித்தார்.

” பிற்பகல் (டிசம்பர் 4) கூட்டத்தில் பெர்சாத்து அரசியல் பணியகம், சட்டமன்றத்தில் என்ன நடந்தது என்பதற்கு ஆழ்ந்த வருத்தத்தை வெளிப்படுத்தியது. இது தொடர்பாக, பேராக் மந்திரி பெசார் மீது பெரும்பான்மையான சட்டமன்ற உறுப்பினர்கள் நம்பிக்கையைத் தெரிவித்துள்ளனர். 4 பெர்சாத்து சட்டமன்ற உறுப்பினர்கள், 3 பாஸ் சட்டமன்ற உறுப்பினர்கள், 1 அம்னோ சட்டமன்ற உறுப்பினர் மற்றும் 2 சுயேச்சை சட்டமன்ற உறுப்பினர்கள் ஆகியோருக்கு பெர்சாத்து தனது பாராட்டுக்களை தெரிவிக்க விரும்புகிறது, ” என்று ஓர் அறிக்கையில் அவர் கூறினார்.

#TamilSchoolmychoice

தேசிய கூட்டணி அரசாங்கத்தின் கட்சிகளுக்கு இடையே உருவாக்கப்பட்ட புரிந்துணர்வு மற்றும் ஒத்துழைப்பு கொள்கைகளை பெர்சாத்து பின்பற்றுகிறது என்றும் ஹம்சா வலியுறுத்தினார்.

“பெர்சாத்து தற்போதைய நிலைமையை கண்காணிக்கும். மேலும் பாஸ் மற்றும் தேசிய கூட்டணியின் பிற கட்சி உறுப்பினர்களுடன் முடிவுகளை எடுப்பதில் தொடர்ந்து பணியாற்றும்,” என்று அவர் மேலும் கூறினார்.

நேற்று பேராக் சட்டமன்றத்தில் மந்திரி பெசாருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டது. பைசால் அசுமுவுக்கு ஆதரவாக 10 பேரும், 48 சட்டமன்ற உறுப்பினரகள் அவருக்கு எதிராகவும் வாக்களித்தனர்.