Home One Line P1 பேராக் நம்பிக்கைக் கூட்டணி சுல்தான் நஸ்ரின் ஷாவை சந்தித்தது

பேராக் நம்பிக்கைக் கூட்டணி சுல்தான் நஸ்ரின் ஷாவை சந்தித்தது

561
0
SHARE
Ad

ஈப்போ: நம்பிக்கை கூட்டணியின் மூன்று கட்சித் தலைவர்கள் பேராக் சுல்தான், சுல்தான் நஸ்ரின் ஷாவை சந்திக்க இஸ்தானா கிந்தாவுக்கு வருகை புரிந்துள்ளனர். அதன்படி அவர்கள் சந்திப்பிற்குப் பிறகு அரண்மனையை விட்டு வெளியேறினர்.

பேராக் ஜசெக தலைவரும், அவுலாங் சட்டமன்ற உறுப்பினருமான ங்கா கோர் மிங் பேராக் பிகேஆர் தலைவர் பார்ஹாஷ் வாபா சால்வடார் ரிசால் முபாரக் மற்றும் அஸ்முனி அவி (அமானா) ஆகியோர் காலை 10.45 மணியளவில் வந்தடைந்தனர்.

பேராக் அம்னோ தலைவர் சரணி முகமட் சுமார் 30 நிமிடங்கள் கழித்து சுல்தானைச் சந்திப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

#TamilSchoolmychoice

நேற்று, செண்டெரியாங் சட்டமன்ற உறுப்பினரும், பெர்சாத்து துணைத் தலைவருமான பேராக் மந்திரி பெசார் அகமட் பைசால் அசுமு தனது பதவியிலிருந்து வெளியேறுவதாக அறிவித்தார்.

பெங்காலான் பாரு சட்டமன்ற உறுப்பினர் அப்துல் மனாப் ஹாஷிம் முன்மொழிந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் மாநிலத்தின் தேர்ந்தெடுக்கப்பட்ட பெரும்பான்மையான பிரதிநிதிகளின் ஆதரவைப் பெற பைசால் அசுமு தவறியதை அடுத்து புதிய மந்திரி பெசார் தேர்வு நடௌபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.