Home One Line P1 இயங்கலை சூதாட்ட விளையாட்டுகளுக்கு தமிழகத்தில் தடை விதிக்கப்படும்

இயங்கலை சூதாட்ட விளையாட்டுகளுக்கு தமிழகத்தில் தடை விதிக்கப்படும்

766
0
SHARE
Ad

சென்னை: இந்தியாவில் இயங்கலை சூதாட்ட விளையாட்டுகளை தடை செய்ய வேண்டுமென அரசியல் கட்சிகள் வலியுறுத்தியுள்ள நிலையில், தமிழகத்தில் இந்த விளையாட்டுகளுக்கு தடை விதிக்கப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

இதேபோல, ஆந்திர மாநிலத்திலும் இந்த விளையாட்டுகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இயங்கலை சூதாட்ட விளையாட்டுகளில் சிக்கி, பணத்தை இழந்து தற்கொலை செய்துகொள்வோரின் எண்ணிக்கை தேசிய அளவில் அதிகரித்து வரும் நிலையில், சூதாட்ட விளையாட்டுகளை விளம்பரப்படுத்துவதற்கு மத்திய அரசு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.