Home இந்தியா கோஹ்லியை திருமணம் செய்ய டிவிட்டரில் தூது விட்ட இங்கிலாந்து வீராங்கனை!

கோஹ்லியை திருமணம் செய்ய டிவிட்டரில் தூது விட்ட இங்கிலாந்து வீராங்கனை!

414
0
SHARE
Ad

Tamil_Daily_News_15793573857மிர்பூர், ஏப்ரல் 7 – இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் வளர்ந்து வரும் இளம் வீராங்கனை டேனியல் ஹயாத், தனது டிவிட்டர் பக்கத்தில் தன்னை திருமணம் செய்து கொள்ள, இந்திய அணியின் இளம் வீரர் விராட் கோஹ்லிக்கு விருப்பம் தெரிவித்துள்ளார்.

கடைசியாக நடந்த டி20 உலககோப்பை இறுதிப் போட்டியில் விராட் கோஹ்லியின் சிறப்பான ஆட்டம் அனைவரையும் கவர்தது.அந்த போட்டியை பார்த்த 22 வயதான டேனியல் ஹயாத் விராட் கோஹ்லியின் சிறப்பான ஆட்டத்தால் தனது மனதை பறிகொடுத்துள்ளார்.

டேனியல் ஹயாத் 22 வயதான இளம் வீராங்கனை. இவர் தனது டிவிட்டர் பக்கத்தில் தன்னை திருமணம் செய்து கொள்ள விருப்பம் தெரிவித்ததால், டிவிட்டர் பக்கம் கலைகட்டியுள்ளது.

#TamilSchoolmychoice

எனவே அதற்கு பல பதில்கள் வந்து குவிந்த வண்ணம் உள்ளன. இதில் விராட் கோஹ்லி ஏற்கனவே பாலிவுட் நடிகை அனுஷ்கா ஷர்மாவிட்டை காதலிக்கிறேன் என்று தெரிவிக்க, ஹயாத் அப்படி இருக்காது என்று நம்பிக்கையுடன் காத்துக் கொண்டிருக்கிறார்.