Home நாடு சிங்கப்பூர் பிரதமருக்கு நஜிப் விருந்து உபசரிப்பு!

சிங்கப்பூர் பிரதமருக்கு நஜிப் விருந்து உபசரிப்பு!

570
0
SHARE
Ad

Najib - Leeபுத்ராஜெயா, ஏப்ரல் 7 – சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங் தனது மனைவி ஹோ சிங்குடன் மலேசியாவிற்கு இரண்டு நாட்கள் அலுவல் நிமித்தமாக வருகை புரிந்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து பிரதமர் நஜிப் துன் ரசாக் நேற்று இரவு, லீ சியன் லூங் மற்றும் அவரது மனைவி ஹோ சிங் ஆகியோருக்கு ரிவர் குரூஸ் தாசிக்கில் அதிகாரப்பூர்வ இரவு விருந்து உபசரிப்பை ஏற்பாடு செய்து அவர்களுடன் கலந்து கொண்டார்.

நஜிப்புடன் அவரது மனைவி ரோஸ்மா மான்சோரும் இந்த விருந்து உபசரிப்பில் கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

#TamilSchoolmychoice

புத்ராஜெயாவில் இன்று நடைபெறும் 5 வது சிங்கப்பூர் மலேசிய தலைவர்களுக்கிடையிலான ஆண்டுக்கூட்டத்தில் லீ சியன் லூங் கலந்து கொள்ளவிருக்கிறார்.

இது குறித்து விஸ்மா புத்ரா வெளியிட்டுள்ள அறிக்கையில், தலைவர்களுக்கிடையிலான இந்த சந்திப்பு இரு நாட்டு உறவுகளுக்கும், புதிய கூட்டு நடவடிக்கைகளுக்கும் ஓர் பாலமாக அமையும் என்று குறிப்பிட்டுள்ளது.